Published:Updated:

இலங்கை அகதிகளிடம் ஜூனியர் விகடன் கருத்துக் கேட்பு... விகடன் நிருபர்கள் மீது வழக்கு!

விகடன்
விகடன்

விகடன் நிருபர்கள் மீது வழக்கு!

``இந்தியாவிலிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்'', ``இலங்கை அகதிகள் 90 சதவிகிதம்பேர் இலங்கைக்குத் திரும்பிச் செல்லத்தான் விரும்புகிறார்கள்'', ``இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதுதான் சரியான தீர்வு'' - குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்தே தமிழகத்தில் முக்கியமாக எதிரொலித்துக்கொண்டிருப்பது இப்படிப்பட்ட குரல்கள்தான்.

விகடன்
விகடன்

இந்நிலையில், சம்பந்தபட்டவர்களான இலங்கைத் தமிழ் அகதிகள் மனநிலை என்ன என்பதை தெரிந்துகொண்டு ஜூனியர் விகடனில் சிறப்புக் கட்டுரை வெளியிடலாம் எனத் திட்டமிட்டோம். இதற்காக தமிழகம் முழுக்கப் பரவியிருக்கும் அம் மக்களைச் சந்தித்து கருத்துகளைச் சேகரித்தனர் விகடன் நிருபர்கள். கருத்துக்கேட்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், கன்னியாகுமரி மாவட்ட நிருபர் சிந்து மற்றும் புகைப்படக்காரர் ராம்குமார் இருவர் மீதும் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரிவு 447- குற்றமுறு அத்துமீறி நுழைதல் (குற்றம்புரியும் நோக்கத்துடன் அத்துமீறி நுழைதல்), பிரிவு-188 அரசாங்க அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்படியாமல் இருத்தல், அதன் காரணமாக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துதல்; பிரிவு-505 (1) பி மக்களிடம் பயம் அல்லது பீதி ஏற்படுத்தி அரசுக்கு எதிராக குற்றம் புரியும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்புதல், விநியோகித்தல் ஆகியவைதான் அந்தப் பிரிவுகள். இதில் பிரிவு-505 (1) பி, என்பது பிணையில் விடமுடியாத சட்டப்பிரிவாகும்.

விகடன்
விகடன்

பத்திரிகை சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன போலீஸாரின் இந்த அணுகுமுறை.

கருத்துக்கேட்புப் பணிகள் தொடர்பான மேலதிக விவரங்களும், வழக்கைச் சட்டப்படி எதிர்கொள்வது தொடர்பான விவரங்களும் விரைவில் தெரிவிக்கப்படும்..!

அடுத்த கட்டுரைக்கு