Published:Updated:

`ரெஸ்பெக்ட் த ரூல்ஸ்’- வரவேற்பைப் பெற்ற குமரி மாணவர்களின் விழிப்புணர்வுக் குறும்படம் #Corona

கொரோனா விழிப்புணர்வு குறும்படம் வெளியிட்ட மாணவர்கள்
கொரோனா விழிப்புணர்வு குறும்படம் வெளியிட்ட மாணவர்கள்

இதற்கு முன்பு நான் தயாரித்த ஹெல்மெட் விழிப்புணர்வு குறும்படத்தை குமரி மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் எங்களை தொடர்புகொண்டு பாராட்டியதும் உத்வேகம் அளித்தது.

கொரோனா வைரஸ் தொற்றாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இளைஞர்கள் பைக்குகளில் சேர்ந்து ஊர்ச்சுற்றுவதும், காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்வதும், பைக்குகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக உள்ளது. இந்தநிலையில், வீட்டில் இருக்கும் மாணவர்கள் தங்கள் நேரத்தை பயனுள்ளவகையில் செலவிடும் விதமாக கொரோனா விழிப்புணர்வு குறும்படம் தயாரித்து வெளியிடுமாறு மாவட்டக் காவல்துறை வேண்டுகோள் விடுத்தது. இதைத் தொடர்ந்து களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு மீனச்சல் பகுதியை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர் நிரஞ்சன் தலைமையில் மாணவர்கள் `ரெஸ்பெக்ட் த ரூல்ஸ்’ என்ற குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் மாணவர்களான கிரிதர், ஸ்ரீகாந்த், ஹரிதா, நந்தனா, தீரஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மாணவர் நிரஞ்சன்
மாணவர் நிரஞ்சன்

கொரோனா ஊரடங்கு சமயத்தில் பைக்கில் ஊர்ச் சுற்றக்கூடாது, அத்தியாவசிய தேவைக்காக வெளியில் சென்றுவந்த உடன் கைகழுவ வேண்டும். அலட்சியமாக இருந்தால் கொரோனா தொற்றுக்கு வழிவகுக்கும் என்ற கருவை மையமாகவைத்து குறும்படம் வெளியிட்டுள்ளனர். அந்த குறும்படத்தை பலர் ஷேர் செய்து வருகின்றனர். ஏற்கெனவே ஹெல்மெட் விழிப்புணர்வு, சாலைபாதுகாப்பு குறித்து இந்த மாணவர்கள் தாரித்த குறும்படத்தை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

மாணவ பருவத்திலேயே விழிப்புணர்வு குறும்படங்களை தயாரித்து, நடித்து, ஒளிப்பதிவு செய்து, எடிட்டிங் செய்து இணையதளங்கள் மூலம் வெளியிட்டு வருகின்றனர். இதுகுறித்து மாணவர் நிரஞ்சன் கூறுகையில், ``கொரோனா ஊரடங்கை மதிக்காமல் பலர் செயல்படுகிறார்கள். அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைகழுவுவதை வலியுறுத்தியும் குறும்படம் தயாரித்துள்ளோம். மாணவர்களாகிய நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் எளிதில் அனைவரையும் சென்றடையும் என்பதால் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி "ரெஸ்பெக்ட் த ரூல்ஸ்" என்ற குறும்படத்தைத் தயாரித்துள்ளோம்.

கொரோனா விழிப்புணர்வு குறும்படம்
கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

இதற்கு முன்பு நான் தயாரித்த ஹெல்மெட் விழிப்புணர்வு குறும்படத்தை குமரி மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் எங்களை தொடர்புகொண்டு பாராட்டியதும் உத்வேகம் அளித்தது. கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தை பலர் ஷேர் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் நிறைய விழிப்புணர்வு குறும்படங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு