Published:Updated:

காரைக்கால் டு சேலம்... 12,000 லிட்டர்  டீசல் கடத்தல் - டேங்கர் லாரியை சேஸ் செய்து பிடித்த போலீஸார்

காரைக்கால்

காரைக்கால் பெட்ரோல் பங்க்கிலிருந்து தமிழ்நாட்டுக்கு 12,000 லிட்டர்  டீசல் கடத்திய டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் டு சேலம்... 12,000 லிட்டர்  டீசல் கடத்தல் - டேங்கர் லாரியை சேஸ் செய்து பிடித்த போலீஸார்

காரைக்கால் பெட்ரோல் பங்க்கிலிருந்து தமிழ்நாட்டுக்கு 12,000 லிட்டர்  டீசல் கடத்திய டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
காரைக்கால்

காரைக்காலிலிருந்து சேலத்துக்கு 12,000 லிட்டர் டீசலைக்  கடத்திச் சென்ற டேங்கர் லாரியை  விரட்டிச் சென்று மடக்கிய  போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட ஒருவரைக் கைதுசெய்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர் உள்ளிட்ட மேலும் மூவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காரைக்கால்
காரைக்கால்

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு காவல் ஆய்வாளர் அறிவுச்செல்வம் மற்றும் போலீஸார் தென்னங்குடி அருகே  ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால்-கும்பகோணம் சாலையில் அதிவேகத்தில் சென்ற டேங்கர் லாரியை  போலீஸார் நிறுத்தியபோது நிற்காமல் சென்றது. அந்த டேங்கரை விரட்டிச் சென்ற போலீஸார் 5 கி.மீ பயணத்துக்குப் பிறகு தென்னங்குடி வரதராஜபெருமாள் கோயிலருகில் வழிமறித்து மடக்கினர். டேங்கரை திருநள்ளாறு போலீஸ்  ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போலீஸாரின் விசாரணையில் காரைக்கால் பச்சூர் நெடுஞ்சாலையில் இயங்கிவரும் தனியார் பெட்ரோல் பங்க்கிலிருந்து 12,000 லிட்டர் டீசலை டேங்கரில் ஏற்றியுள்ளனர். 12,000 லிட்டர் டீசலை ஏற்றிச் செல்வதற்காக பெட்ரோல் பங்க் உரிமையாளரால் போலியாக கம்ப்யூட்டரில் வடிவமைக்கப்பட்ட விற்பனை ரசீதை டேங்கர் ஓட்டநரிடமிருந்து போலீஸார்  பறிமுதல்  செய்தனர். டீசல் எடுத்துச் செல்வதற்காகத் தனியார்  நிறுவனம் போலியாக இன்வாய்ஸ் தயாரித்திருந்ததும் தெரியவந்தது.

காரைக்கால் sp office
காரைக்கால் sp office

அந்தப் போலி ஆவணத்தைக் கைப்பற்றி டீசலுடன் டேங்கரையும், டேங்கரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் தூத்துக்குடி கீழப்பாண்டிவார் மங்கலத்தைச் சேர்ந்த மகன் மாரிச்செல்வம் என்பவரையும் காரைக்கால் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு  காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்தக் கடத்தல் தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு காவல் நிலைய ஆய்வாளர் பிரான்சிஸ் டொமினிக் மற்றும் போலீஸார் வழக்கு பதிவுசெய்து டீசலுடன் டேங்கரை ஒட்டிச் சென்ற ஓட்டுநர் மாரிச்செல்வத்தைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இது தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர், மேலாளர், பங்க் ஊழியர் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.