Published:Updated:

`கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் நாட்டுக்கோழி அன்பளிப்பு!' - மக்களை ஊக்குவிக்கும் சமூக சேவகி

வெளிநாட்டில் பணிபுரியும் கணவர் மோகன் மாதாமாதம் தனது ஊதியத்தை அனுப்பி விடுகிறார். அதில் இல்லத் தேவைகள் போக, எஞ்சிய பணத்தை தன் மகள் மோனிகா பெயரில் தொடங்கியுள்ள `மோனிகா அறக்கட்டளை'யில் சேர்த்துவிடுகிறார் வேம்பு.

கொரோனா நோயிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்திருக்கிறது. காரைக்காலில் இந்தப் பணியை விரைவுபடுத்த தன் சேவையையும் இணைத்துள்ளார் ஒரு பெண்மணி.

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் வசிப்பவர் வேம்பு மோகன். இவரின் ஒரே மகள் மோனிகா, குரூப் ஒன் தேர்வில் கவனம் செலுத்தினார். மோனிகாவுக்கு கோலாகலமாகத் திருமணம் நடந்தது. திருமணமான பின்னரும் படிப்பைத் தொடர்ந்த மோனிகாவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக மோனிகாவை மரணம் ஆட்கொண்டது. திருமணமான சில மாதங்களில் இறந்துவிட்ட மகளின் சோகம், வேம்பு மோகன் குடும்பத்தாரை நிலைகுலைய வைத்தது.

மோனிகாவின் நினைவுகள் நித்தம் நித்தம் வேம்பு மோகன் குடும்பத்தை சோகத்தில் தள்ளியது. மகளின் பிரிவாற்றாமைக்கு சேவையை மருந்தாக்க வேம்பு மோகனும், அவர் கணவர் மோகனும் முடிவெடுத்தனர்.

நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி
`இந்த உதவி போதும்; என் மகனை கரைசேர்த்திடுவேன்!' - பெண்ணுக்கு ஒரு மணி நேரத்தில் வீடு வழங்கிய ஆட்சியர்

வெளிநாட்டில் பணிபுரியும் கணவர் மோகன் மாதாமாதம் தனது ஊதியத்தை அனுப்பி விடுகிறார். அதில் இல்லத் தேவைகள்  போக, எஞ்சிய பணத்தை தன் மகள் மோனிகா பெயரில் தொடங்கியுள்ள `மோனிகா அறக்கட்டளை'யில் சேர்த்துவிடுகிறார் வேம்பு. அந்தத் தொகை முழுவதும் வறிய மக்களுக்காகவே செலவிடப்படுகிறது. 

பகல் பொழுதில் மதிய உணவுப் பொட்டலங்களுடன் புறப்பட்டு விடுகிறார் வேம்பு மோகன், தன் மருமகளுடன். ஆளுக்கொரு ஏரியாவை பிரித்துக் கொண்டு, பசியோடு இருப்பவர்களிடம் அதைச் சேர்க்கிறார்கள். சாலையோரம், வழிபாட்டு தளங்கள், மருத்துவமனைப் பகுதிகள் என அங்கெல்லாம் பசியால் வாடும் ஏழை, எளியவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் வழங்குகிறார்கள். காரைக்கால் நகர்ப்புறம் தவிர, சுமார் 30 கிராமங்கள் இவர்களின் சேவை வரைபடத்தினுள் இடம் பெற்றிருக்கின்றன.  

வீடு திரும்பியதும் பள்ளிமாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி நடக்கிறது. இந்த வகுப்புகள் இரவு வரை நீள்கின்றன. கிட்டத்தட்ட 120 மாணவ, மாணவியர் படித்தாலும் பாடங்களை கட்டணமின்றி போதிக்கின்றனர். அன்றிரவு, மறுநாள் செயல் பாட்டுக்கான திட்டமிடல், முன்னேற்பாடுகளைச் செய்த பிறகே உறங்கப் போகிறார் வேம்பு மோகன்.

இதுகுறித்து வேம்பு மோகனிடம் பேசினோம். ``எங்க மகள் இறந்த  பிறகு, அவள் நகைகளை விற்றும், என் கணவர் சம்பாதிக்கும் பணத்தில் இருந்தும் அறக்கட்டளை சேவைக்குப் பயன்படுத்துறோம். உணவுப் பொட்டலங்களை அட்டைப் பெட்டிகள்ல நானும் என் மருமகளும் எடுத்துட்டுப் போகும்போது, போலீஸார் மறிச்சிருக்காங்க. சமூக இடைவெளியைப் பின்பற்றலைனு பலமுறை அபராதமும் விதிச்சிருங்காங்க.

வேம்பு மோகன்
வேம்பு மோகன்

கொரோனாவால பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் உணவு எடுத்துக் போவதாகக் கூறியும் அதை அவங்க காதுல வாங்கிறதில்லை. என்றாலும் நாங்க இதுவரை 10,000 பேருக்கு மேல்  உணவளிச்சிருக்கோம். இந்த நித்திய அன்னதானத்தை பல்வேறு சோதனையிலும் நிறுத்தாமல் தொடர்கிறோம்.

பள்ளி மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சிக்கு தற்போதுள்ள கம்ப்யூட்டர் போதாது. மேலும் அவற்றில் பாதி பழசு. யாராவது புதிய கம்ப்யூட்டர்களை வழங்க முன்வந்தா, தொடர்ந்து வகுப்புகளை நடத்துவதுடன், கூடுதலாகவும் மாணவர்களை தைரியமா சேர்ப்போம். அதுபோல், தினமும் நாங்களே சமையலும் செய்து, வகுப்பும் எடுத்து வருவதால அசதியாகத்தான் இருக்கு. ஆனாலும், ஏழைகளுக்கு உதவணும்னு நினைச்ச மகள் மோனிகா எண்ணத்தை நிறைவேற்றுற நிறைவு, அத்தனையையும் மறக்கடிச்சிடுது'' என்றவர், தடுப்பூசி சேவை பற்றிப் பேசினார்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள்; இலவசமாக அளித்த குன்னூர் பெண்!

``கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, கொரோனா ஊசிக்காக பதிவு செய்தவர்களுக்கு தலா ஒரு நாட்டுக் கோழியைக் கொடுக்கிறோம். அன்னதானம் செய்கிற பயணத்தை விட, தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு தர நாட்டுக் கோழியைத்  தேடி அலைவதுதான் கூடுதல் அலைச்சலா இருக்கு" என்று சிரிக்கிறார் வேம்பு மோகன்!

உதவும் கரங்களுக்கு ஊன்றுகோல்கள் இணைந்தால், இதுபோன்ற தன்னலமற்ற சேவைகள் இன்னும் பரவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு