Published:Updated:

``அண்ணனா நெனச்சுகோங்க; ஏதாச்சும் தேவைன்னா போன் பண்ணுங்க!" - இளம்பெண்ணிற்கு உதவிய ஆட்சியர்

கண்மணியிடம் நலம் விசாரிக்கும் ஆட்சியர்
கண்மணியிடம் நலம் விசாரிக்கும் ஆட்சியர்

இவர்களுக்கு பெற்றோர் இல்லை. பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தனர். ஒரு மாதத்திற்கு முன்பு பாட்டியும் இறந்துவிட, உதவிக்குக்கூட யாரும் இன்றி இருவரும் நிர்கதியாய் நின்றனர்.

உடல்நல பாதிப்பால் வாய்பேசாமல் போன 20 வயது இளம்பெண்ணுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரூர் நகராட்சிக்குட்பட்ட எஸ்.வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் கண்மணி (வயது 20). இவர், கடந்த ஜனவரி மாதம் வீட்டில் இருந்து தவறி கீழே விழுந்த நிலையில் அவருக்கு பேச்சு வரவில்லை. அதோடு, கண்மணியின் இரண்டு கைகளும் சரிவர இயங்காத நிலையில் உள்ளார். இவருக்கு ஒரு தங்கை மட்டுமே உள்ளார்.

தனபாக்கியத்தோடு அதிகாரிகள்
தனபாக்கியத்தோடு அதிகாரிகள்
`உதவித்தொகை மட்டும் கிடைச்சா காலத்தை கழிச்சிருவோம்..!’ - முதியவர்களை நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர்

இவர்களுக்கு பெற்றோர் இல்லை. பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தனர். ஒரு மாதத்திற்கு முன்பு பாட்டியும் இறந்துவிட, உதவிக்குக்கூட யாரும் இன்றி இருவரும் நிர்கதியாய் நின்றனர்.

இவர்களின் இந்த சோக நிலையைக் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர், உடனடியாக மருத்துவக்குழுவினரை கண்மணியின் வீட்டிற்கே சென்று பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில், கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து மருத்துவக்குழுவினர் எஸ்.வெள்ளாளப்பட்டியில் உள்ள கண்மணியின் வீட்டிற்கே சென்று பரிசோதித்து, அவரை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்போது, அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரூர் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர், கண்மணி அனுமதிக்கப்பட்டிருந்த வார்டிற்கே நேரில் சென்று அவருடன் உரையாடினார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், கண்மணிக்கு ஏதேனும் உயர்சிகிச்சை தேவைப்படும்பட்சத்தில் மதுரை அல்லது சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய ஏற்பாடுகள் செய்யலாம் என்று மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

கண்மணியிடம் நலம் விசாரிக்கும் ஆட்சியர்
கண்மணியிடம் நலம் விசாரிக்கும் ஆட்சியர்
``உங்கள மாதிரி கலெக்டர் ஆகப்போறேன்!" - ஆய்வுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியரை நெகிழ வைத்த மாணவர்கள்

அதோடு, கண்மணியின் தங்கையிடம், ``உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். கூடவே, ``விரைவில் கண்மணி பூரண குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்புவார்'' என்று ஆறுதல் தெரிவித்த மாவட்ட ஆட்சித்தலைவர், ``இந்த சின்ன வயசுல உங்க அக்காவை இவ்வளவு பாசத்துடனும், அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் பார்த்துக்கொள்ளும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்'' என்று கண்மணியின் தங்கையை வாழ்த்தினார். அதோடு, தன்னுடைய செல்போன் எண்ணை கண்மணியின் சகோதரியிடம், மாவட்ட ஆட்சித்தலைவர் தனது கைப்பட எழுதிக் கொடுத்து, ``என்னை அண்ணனா நெனச்சுக்குங்க. எந்த உதவி வேண்டுமென்றாலும் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவித்தது, அங்கு கூடியிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதேபோல், வாட்ஸ்அப் ஃபார்வேர்டு மூலம் அறியப்பட்ட ஆதரவற்று நின்ற மூதாட்டியை ஒருவரையும் காப்பகத்தில் சேர்க்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு