Published:Updated:

`7 கிராமப் பகுதிகளில் 100 சதவிகித கொரோனா தடுப்பூசி!' - சாதித்த கரூர் மாவட்ட செவிலியர்கள்

பரிசுபெற்ற செவிலியர்கள்
பரிசுபெற்ற செவிலியர்கள்

`` 7 கிராம பகுதிகளில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.”

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் சிறப்பாகப் பணியாற்றிய செவிலியர், சுகாதார பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் சான்றிதழையும் கேடயத்தையும் வழங்கினார்.

கரூர்
கரூர்
கரூர்: நிலப் பிரச்னை; இருதரப்பு மோதல்! - தடுக்கப்போன முதியவருக்கு நேர்ந்த துயரம்

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா இல்லாத கரூரை உருவாக்கும் நோக்கில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாகச் பணியாற்றிமைக்காக செவிலியர், சுகாதாரப் பணியாளர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும்போது,

`` `கொரோனா இல்லா கரூர்' என்ற மாபெரும் இயக்கத்தை கரூர் மாவட்ட நிர்வாகம் தனது கையிலெடுத்து, அதை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாகக் கடைப்பிடிக்க, அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில், மாபெரும் கையெழுத்து இயக்கம், உள்ளிட்ட பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்டத்தில் கொரோனா இல்லா கரூரை உருவாக்கும் நோக்கில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பரிசுபெற்ற செவிலியர்கள்
பரிசுபெற்ற செவிலியர்கள்

தோகைமலை வட்டாரம் ஆர்ச்சம்பட்டி, கிருஷ்ணராயபுரம் வட்டாரம் மேலமாயனூர், கரூர் வட்டாரம் கிழக்கு தவுட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம், தோட்டக்குறிச்சி, தாந்தோணி வட்டாரம் ஆண்டாங்கோவில், கடவூர் வட்டாரம் வரவணை, சங்கிபூசாரியூர், காணியாளம்பட்டி ஆகிய ஏழு கிராமப் பகுதிகளில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா தடுப்புப் பணிகளில் தங்களது உயிரை துச்சமெனப் பணயம் வைத்துப் போராடிவரும் உங்களுக்கு மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கரூர் மாவட்டம் முழுவதும் 100 சதவிகிதம் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுகாதாரப் பணியாளர்கள் இந்தப் பணிகளை விரைவாகவும் சிறப்பாகவும் முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு