Published:Updated:

பூரண குணமடைந்த 9 கொரோனா நோயாளிகள்.. நேரில் வந்து வழியனுப்பி வைத்த கரூர் ஆட்சியர்!

28 பேர்களை வழியனுப்பும் ஆட்சியர்
28 பேர்களை வழியனுப்பும் ஆட்சியர் ( நா.ராஜமுருகன் )

கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23 பேர்களில் 9 பேர்களோடு சேர்ந்து, கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று கண்காணிக்கபட்ட 19 பேர்களையும் சேர்த்து, மொத்தம் 28 பேர்களை வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இருந்தவர்களில் 28 நபர்கள், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 9 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கூறி, வழியனுப்பி வைத்தார்.

28 பேர்களை வழியனுப்பும் ஆட்சியர்
28 பேர்களை வழியனுப்பும் ஆட்சியர்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், கடந்த ஒன்றாம் தேதிதான் குளித்தலைப் பகுதியைச் சேர்ந்த தனியார் பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த 30 பேர்களில் ஒருவர்.

`26 ஆக உயர்ந்த எண்ணிக்கை; களமிறங்கிய 4 மாவட்ட மருத்துவர்கள்!' - கொரோனா தொற்றால் கலங்கும் கரூர்

அதன்பிறகு, தோகைமலையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகும், 15, 6 என்று கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்தது. அதன்பிறகு, ஒரு வாரம் எண்ணிக்கை எதுவும் கூடவில்லை. இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி மூன்று புதிய கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட, கரூரில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

28 பேர்களை வழியனுப்பும் ஆட்சியர்
28 பேர்களை வழியனுப்பும் ஆட்சியர்
நா.ராஜமுருகன்

இந்த நிலையில், நேற்று புதிதாக 15 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், ஏற்கனவே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23 பேர்களில் 9 பேர்கள் பூரண குணமடைந்ததாக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை நிர்வாகம் சார்பில் சொல்லப்பட்டது. அவர்களோடு, சேர்ந்து கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று கண்காணிக்கபட்ட 19 பேர்களையும் சேர்த்து, மொத்தம் 28 பேர்களை நேற்று வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.

நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் 9 பேர் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய தொடர் சிகிச்சையால் தொற்று உள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 நபர்கள் தற்போது பூரண குணமடைந்து மனமகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றனர். மேலும், ரத்தப் பரிசோதனையின் போது தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட 19 நபர்கள் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட 28 நாட்களை கடந்த பிறகு, இன்று வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் நேரில் சென்று அனைவருக்கும் வாழ்த்துக்கூறி, அவர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி கூறி, பிறகு அவர்களை வழியனுப்பி வைத்தார்.

28 பேர்களை வழியனுப்பும் ஆட்சியர்
28 பேர்களை வழியனுப்பும் ஆட்சியர்
நா.ராஜமுருகன்

இந்த 28 நபர்களும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகனுக்கும், சிறப்பாக மருத்துவ சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் என்று அனைவருக்கும் தங்களது நன்றிகளை சமர்ப்பித்துச் சென்றனர். இந்த 28 நபர்களும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், அசாதாரண சூழ்நிலையிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி சேவை புரிந்து வரும் அனைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரோஸி வெண்ணிலா, கூடுதல் முதல்வர் மரு.தரணி ராஜன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு