Published:Updated:

"18 வயதுக்குட்பட்டவர்களின் வாகனங்களுக்குப் பெட்ரோல் கிடையாது!"- கரூர் கலெக்டர் அதிரடி!

ஆலோசனைக் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

"18 வயதுக்குட்பட்டவர்களின் வாகனங்களுக்குப் பெட்ரோல் கிடையாது!"- கரூர் கலெக்டர் அதிரடி!

கரூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Published:Updated:
ஆலோசனைக் கூட்டம்

"தலைக்கவசம் அணிவதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வரும் 18-ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் எவருக்கும் எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது" என்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அந்தக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பல விஷயங்களைச் சொன்னார்:

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

"இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி, அதிக அளவில் உயிரிழப்புகள் நடக்கும் மாவட்டமாக கரூர் மாவட்டம் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. இந்த உயிரிழப்புகள் அனைத்தும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல். `தலைக்கவசம் உயிர்க்கவசம்’ என்ற வார்த்தைகளில் உள்ள ஆழமான அர்த்தத்தை அனைவரும் உணர வேண்டும். இந்த உலகிலேயே விலைமதிப்பில்லாதது மனித உயிர்கள் மட்டுமே! எனவே, அனைவரின் நலன் கருதியும் கரூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் வகையில், இதனை அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து ஒரு இயக்கமாகவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 18.04.2022 முதல் கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உணவகங்கள், ஜவுளி, நகைக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள், தொழிற்சாலைகள் என எந்த ஒரு இடத்திற்கும் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து அனைத்துப் பகுதிகள், நிறுவனங்களின் முகப்புகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். இச்செய்தி குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பெட்ரோல் பங்க்குகளில் தலைக்கவசம் அணியாமல் வரும் யாருக்கும் பெட்ரோல் வழங்கக்கூடாது. மேலும், 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தால் பெட்ரோல் வழங்கக் கூடாது. நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் இருக்கைப் பட்டை அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் வருபவர்களே! எனவே, தனியார் நிறுவனங்களில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருவோரைப் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. தலைக்கவசம் விற்பனை நிலையங்களில் வருவாய் கோட்டாட்சியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தரமான ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய தலைக்கவசங்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை உறுதி செய்திட வேண்டும். தரமற்ற வகையிலான தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அரசு மதுபானக்கடைகளில் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகனஓட்டிகளுக்குக் கட்டாயம் மதுபானம் வழங்கக் கூடாது. இது குறித்து அனைத்து மதுபானக் கடைகளிலும் அறிவிப்புப் பதாகை வைக்கப்பட வேண்டும்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் இந்த உயிர் காக்கும் இயக்கத்தால், ஒரு உயிர் காப்பாற்றப்பட்டாலும் நமக்கு வெற்றியே! கரூர் மாவட்டக் காவல் துறையால் 1.1.2022 முதல் தற்போது வரை தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 75,534 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து வருகின்றார்கள் என்ற நிலையினை கரூர் மாவட்டத்தில் நாம் அனைவரும் உருவாக்க வேண்டும். 18.04.2022-க்குப் பிறகு அனைத்துப் பகுதிகளிலும் இத்திட்டம் மிகவும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும், பொதுமக்களும் இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்!" என்றார்.