Published:Updated:

கரூர் அதிர்ச்சி: `அரசு மருத்துவருக்கு கொரோனா - குடும்பத்தில் ஐந்து பேருக்கும் பாதிப்பு!

 கொரோனா சிறப்பு வார்டு
கொரோனா சிறப்பு வார்டு ( நா.ராஜமுருகன் )

காமராஜபுரத்தில் வசிக்கும் அரசு மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள ஐந்து நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால், சுகாதாரத்துறையினர் அந்த தெருவையும் தங்களது கண்காணிப்பில் கொண்டுவந்துள்ளனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவராகப் பணியாற்றிவரும் இளைஞர் ஒருவருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியாக, அவர் மூலமாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி, கரூர் மாவட்ட மக்களை அதிரவைத்திருக்கிறது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி
நா.ராஜமுருகன்
கொரோனா: அடுத்தடுத்த நாள்களில் இருவர் மரணம்! - அதிர்ச்சி தரும் கரூர் நிலவரம்

கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிறப்புத் தடுப்பு சிகிச்சைப் பிரிவில் வைத்து, சிகிச்சையளித்து வருகிறார்கள். இந்த கொரோனா சிறப்பு வார்டில், அரசு மருத்துவராக கரூர் காமராஜபுரத்தைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இந்தச் சூழலில், நேற்று முன்தினம் கரூர் மாவட்டத்தில் ஒன்பது பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிப்பு செய்யப்பட்டது.

கொரோனா சிறப்பு வார்டு
கொரோனா சிறப்பு வார்டு
நா.ராஜமுருகன்

அதில், அந்த அரசு மருத்துவரும் ஒருவர். அதைவிட, அந்த அரசு மருத்துவரின் குடும்பத்தைச் சேர்ந்த 55 வயது ஆண், 47 வயது பெண், 28 வயது பெண், 25 வயது ஆண், 2 வயதுக் குழந்தை என்று கூடுதலாக ஐந்து பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாக, சுகாதாரத்துறையினர் அதிர்ந்துபோனார்கள். காமராஜபுரத்தில் உள்ள அந்த அரசு மருத்துவரின் வீட்டைப் பூட்டி, சீல் வைத்தனர். அந்த அரசு மருத்துவர் மூலமாகத்தான், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதையும் கண்டறிந்தனர்.

கொரோனா: மூச்சுத்திணறல் - சிகிச்சை பலனின்றி விருதுநகர் தலைமைக் காவலர் உயிரிழப்பு!

அதைத்தொடர்ந்து, அந்த அரசு மருத்துவருக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்று சுகாதாரத்துறையினர் விசாரித்தனர். அந்த அரசு மருத்துவர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் பணிபுரிவதோடு மட்டுமில்லாமல், கரூர் மேற்கு கௌரிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றியது தெரியவந்தது. அங்குள்ள வெளிநோயாளிகளுக்கு அந்த அரசு மருத்துவர் சிகிச்சையளித்து வந்திருக்கிறார். அங்குதான், அந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அந்த மருத்துவமனையின் வெளிவாசலைப் பூட்டினர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி
நா.ராஜமுருகன்

அந்த மருத்துவமனையில் நோயாளிகள் சிலர் சிகிச்சை பெற்றுவருவதால், அந்த மருத்துவமனையின் பக்கவாட்டு வழியாக, மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். காமராஜபுரத்தில் வசிக்கும் அரசு மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள ஐந்து நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால், சுகாதாரத்துறையினர் அந்தத் தெருவையும் தங்களது கண்காணிப்பில் கொண்டுவந்துள்ளனர். அரசு மருத்துவருக்கும், அவரது குடும்பத்தில் உள்ள ஐந்து நபர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால், கரூர் மாவட்ட பொதுமக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு