Published:Updated:

̀தடுப்பூசி போட்டுக்கோங்க; பிள்ளைகள் உயர்கல்வி கட்டணத்தை நாங்க ஏத்துக்குறோம்!' - அசத்தும் அரசுப்பள்ளி

சான்று வழங்கும் நிகழ்ச்சி
News
சான்று வழங்கும் நிகழ்ச்சி ( படம்: நா.ராஜமுருகன் / விகடன் )

கரூர் மாவட்டத்திலேயே முதன்முதலில் மக்களே சேர்ந்து இந்தப் பள்ளிக்கு கல்விச்சீர் கொடுக்கும் விழாவைத் தொடங்கி, தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அப்படி கல்விச்சீர் கொடுத்து வருகிறார்கள். அதற்காக, ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழையும், இந்திய அளவில் விருதையும் இந்தப் பள்ளி பெற்றிருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களாக உலகையே ஒருவழி செய்துவரும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது சற்றுக் குறைந்திருக்கிறது. அதற்குக் காரணம், தடுப்பூசிதான். ஆனால், இன்னமும் பலர் தடுப்பூசி போடாமல் தவிர்த்து வருகின்றனர். அவர்களைத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைக்க, அரசு பல விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, பரிசெல்லாம் வழங்கப்பட்டு வருகிறது.

க.பரமத்தி அரசு பள்ளி
க.பரமத்தி அரசு பள்ளி
படம்: நா.ராஜமுருகன் / விகடன்

இச்சூழலில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர், தனது பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், அவர்களில் குலுக்கல் முறையில் மூன்று பேரை தேர்ந்தெடுத்து, அவர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கான செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்து அசத்தினார். அதன்படி, 20 பெற்றோர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள, அவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேரின் குழந்தைகளுக்கான உயர்கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளும் உறுதிமொழி சான்றிதழை தற்போது வழங்கியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கரூர் மாவட்டம், க.பரமத்தியில் இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்தப் பள்ளியில் 214 மாணவர்கள் பயில்கின்றனர். மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள இந்தப் பள்ளியில் படிக்கும் அனைவரும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். இந்தப் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஸ்பான்ஸர்களைப் பிடித்து, பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளையும் ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றியிருக்கிறார், பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன்.

சான்று வழங்கு பெற்றோர்
சான்று வழங்கு பெற்றோர்
படம்: நா.ராஜமுருகன் / விகடன்

கரூர் மாவட்டத்திலேயே முதன்முதலில் மக்களே சேர்ந்து இந்தப் பள்ளிக்கு கல்விச்சீர் கொடுக்கும் விழாவைத் தொடங்கி, தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அப்படி கல்விச்சீர் கொடுத்து வருகிறார்கள். அதற்காக, ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழையும், இந்திய அளவில் விருதையும் இந்தப் பள்ளி பெற்றிருக்கிறது. இந்த நிலையில்தான், இந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களும் நலமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், தடுப்பூசி போட வைக்க புது முயற்சியை எடுத்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி, தமிழக அளவில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவிட்டது. அப்போது, அக்டோபர் 1-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பெற்றோர்களை அதற்கான சான்றிதழைக் கொண்டு வந்து பள்ளியில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி, 20 பிள்ளைகளின் பெற்றோர்கள் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை வழங்க, அதை வைத்து குலுக்கல் முறையில் மூன்று பேரை தேர்ந்தெடுத்தனர்.

உறுதிமொழி சான்றிதழை வழங்கும் எம்.எல்.ஏ
உறுதிமொழி சான்றிதழை வழங்கும் எம்.எல்.ஏ
படம்: நா.ராஜமுருகன் / விகடன்

`அவர்களின் பிள்ளைகளுக்கு டிகிரி வரை அரசுக் கல்வி நிறுவனங்களில் பயிலத் தேவைப்படும் பண உதவியை நாங்களே செய்வோம்' என்று உறுதிமொழி அளித்திருக்கிறார்கள். அந்த உறுதிமொழி சான்றிதழ்களை, தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெற்றோரிடம் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ மொஞ்சனூர் இளங்கோ மூலமாக, சில தினங்களுக்கு முன்பு வழங்கியிருக்கின்றனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணனிடம் பேசினோம்.

``சுத்துப்பட்டில உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பிள்ளைகளை எங்க பள்ளியில சேர்த்துப் படிக்க வைக்கிறாங்க. கூலி வேலைக்குப் போறவங்க, டிரைவர்கள், சாலைப் பணியாளர்கள், கொத்தனார், தச்சு வேலை பார்ப்பவர்கள்னு எளிய மக்கள்தான் இங்கே வசிக்கிறாங்க. ஆனா, பல பெற்றோர்கள் தடுப்பூசி போடுவதை சாதாரணமா நினைச்சு, அதைப் போட்டுக்கொள்ளலை. அதனால, இந்த ஊரை 100 சதவிகிதம் ஊசி போட்டுக்கொள்ள வைக்க நினைச்சோம்.

எங்க பள்ளியில படிக்கும் பிள்ளைகளின் 380 தாய், தந்தையர்களில், 40 பெற்றோர் ஊசி போட்டுக்கலை. அதனால, அவங்களை ஊசி போட்டுக்கொள்ள வைக்க, இந்த அறிவிப்பை செஞ்சோம். அப்படியும் பலர் ஊசி போட்டுக்க முன்வரல. குலுக்கல் முறையில், 2-ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீ சமிக்ஷாவின் தந்தை சுரேஷ்குமார், 4-ம் வகுப்பு படிக்கும் ஜான் ஆன்ட்ரோராஜின் தந்தை அருள்ராஜ், போதிதரனின் தந்தை சாந்தகுமார்னு மூணு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டாங்க. இவர்களில், அருள்ராஜூம் சாந்தகுமாரும் ஊசி போட்டுக்க மறுத்தாங்க.

 செல்வக்கண்ணன்
செல்வக்கண்ணன்
படம்: நா.ராஜமுருகன் / விகடன்

நான் இரண்டு தவணை ஊசிகள் போட்டுக்கொண்டதை சுட்டிக்காட்டி, 'எனக்கு எதுவும் ஆகலை. பயம் வேண்டாம்'னு சொன்னேன். அதன்பிறகே, ஊசி போட்டுக்கிட்டாங்க. இப்போ, அவங்க இருவரும்தான் குலுக்கலில் வென்றிருக்காங்க. ஒரு உத்தரவாதம் கொடுக்க, அதற்கான சான்றிதழை எம்.எல்.ஏ சார் மூலமாக மூணு பேருக்கும் வழங்கியிருக்கோம். கிட்டத்தட்ட எங்க பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களில் 90 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டுக்கிட்டாங்க. மீதம் உள்ளவர்களும் ஊசி போட்டுக்கிட்டு இருக்காங்க.

ஏற்கெனவே, கொரோனா பாதிப்பே முற்றிலும் குறையலை. இந்த நிலையில், ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு, தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கியிருக்கு. அதனால், மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கணும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனே செலுத்திக்கணும். இங்குள்ள கிராம மக்களை தடுப்பூசி போட வைக்க தூண்டுவதற்கு, எங்களது முயற்சி ஒரு காரணியா இருந்தா அதுவே எங்களுக்குக் கிடைத்த வெற்றி'' என்றார்.

ஜான் ஆன்ட்ரோராஜின் தந்தை அருள்ராஜிடம் பேசினோம்.

``நான் வேன் டிரைவர இருக்கேன். `எனக்கெல்லாம் கொரோனா வராது, ஊசி போட்டுக்க மாட்டேன்'னு வீம்பா திரிஞ்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, செல்வக்கண்ணன் சார்தான், கொரோனா ஊசி போடுறதை பத்தி எனக்கு கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லி புரிய வச்சார். அதன்பிறகே தடுப்பூசி போட்டுக்கிட்டு அதற்கான சான்றிதழை பள்ளியில் ஒப்படைச்சேன். கடைசியில் வேண்டா வெறுப்பா ஊசி போட்டுக்கொண்ட நான்தான் குலுக்கலில் வெற்றி பெற்றிருக்கேன்.

 கல்விக்கட்டணம் உறுதிமொழி சான்று
கல்விக்கட்டணம் உறுதிமொழி சான்று

என் மகன் அரசு நிறுவனங்களில் உயர்கல்வி படிக்க ஆகும் அத்தனை செலவையும் ஏத்துக்கிறதாகச் சொல்லி, பள்ளி தரப்பில் உறுதிமொழி சான்றிதழும் கொடுத்திருக்காங்க. மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு" என்றார்.