Published:Updated:

கரூர்: 'கடன் வசூல் தொகை ரூ.10 லட்சம்; மாயமான இடைத்தரகர் பெண்!’ - கலங்கும் சுயஉதவிக்குழுப் பெண்கள்

புகாரளிக்க வந்த சுயஉதவிக்குழுப் பெண்கள்
புகாரளிக்க வந்த சுயஉதவிக்குழுப் பெண்கள்

அம்மு என்ற சாந்தலட்சுமி என்பவர் கடந்த 10 வாரங்களாக செலுத்தக்கூடிய தொகையை வசூல் செய்துவிட்டு, நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் தலைமறைவு ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

தங்களிடம் கடன் தொகையாக வசூலித்த தொகை ரூ.10 லட்சம் ரூபாயை மோசடி செய்த பெண்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் கரூர் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரளிக்க வந்த சுயஉதவிக்குழுப் பெண்கள்
புகாரளிக்க வந்த சுயஉதவிக்குழுப் பெண்கள்
கரூர்: தடையை மீறி சேவல் சண்டை; 18 பைக்குகள் பறிமுதல்! - 5 பேரை வளைத்த போலீஸ்

கரூர் மாவட்டம், காந்திகிராமத்தில் வசித்துவருபவர் போதும்பொண்ணு. இவர் ஒரு சுயஉதவிக்குழுவின் தலைவியாக இருக்கிறார். இந்த சுயஉதவிக்குழுவில் 105 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அனைவரும் கரூர் நகர் பகுதியிலுள்ள திண்ணப்பா திரையரங்கம் பின்புறம் செயல்பட்டுவரும் விசாகம் கேபிடல் தனியார் நிதி நிறுவனத்தில், நபர் ஒருவருக்கு ரூபாய் 15 ஆயிரம் கடன் பெற்றுள்ளனர். வாரம் ரூ.900 வீதம், 105 பெண்களும் தான்தோன்றிமலை ராமச்சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த அம்மு என்ற சாந்தலட்சுமி மூலம் செலுத்திவந்துள்ளனர். இந்தநிலையில், அம்மு என்ற சாந்தலட்சுமி என்பவர் கடந்த 10 வாரங்களாக செலுத்தக்கூடிய தொகையை வசூல் செய்துவிட்டு, நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் தலைமறைவு ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், சாந்தலட்சுமியைப் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர்.

மோசடி
மோசடி
representational image

ஆனால், அவரைக் கண்டுப்பிடிக்கமுடியவில்லை. இந்தநிலையில், இது சம்பந்தப்பட்ட நிதிநிறுவனம் கடன் கொடுத்த நபர்களைத் தொடர்புகொண்டு, கடனைச் செலுத்த வலியுறுத்திக் கூறியுள்ளனர். இதனால், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சாந்தலட்சுமியால் ஏமாற்றப்பட்ட 15-க்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழுப் பெண்கள் கூடி, எஸ்.பி சசாங் சாயிடம் மனு அளித்தனர்.

இது குறித்து, சாந்தலட்சுமியால் பாதிக்கப்பட்ட வசந்தா என்ற பெண், ``சுயஉதவிக்குழுப் பெண்கள் தங்கள் குடும்பத் தேவைகளுக்காகக் கடன் பெற்று, நிதி நிறுவனத்துக்கு முறையாகச் செலுத்திவருகிறோம். சுயஉதவிக்குழுவிலுள்ள 105 பெண்களும் சாதாரண நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். தினமும் கூலி வேலைக்குப் போய் குடும்பத்தை நடத்துபவர்கள்தான் அதிகம். அதனால், சுயஉதவிக்குழுவை ஆரம்பித்து, அதில் இணைந்து வங்கிகளில் கடன் பெற்று முறையாகக் கட்டிவருகிறோம். இந்தநிலையில்தான், 105 பேரும் தனியார் நிதி நிறுவனத்திடம் ஆளுக்கு தலா ரூ.15,000 வீதம் கடன் பெற்றோம். வாரா வாரம் எல்லோரும் ரூ.900 வீதம் கட்டிவந்தோம். தனித்தனியாக எங்கள் கடன் தொகையைக் கட்ட முடியாது. 105 பெண்களின் மொத்தப் பணத்தையும் வசூலித்து, கட்ட வேண்டும்.

புகாரளிக்க வந்த சுயஉதவிக்குழுப் பெண்கள்
புகாரளிக்க வந்த சுயஉதவிக்குழுப் பெண்கள்

அதனால், இப்படி வசூல் செய்து வழங்கும் பணியை மேற்கொண்டிருந்த இடைத்தரகரான அம்மு என்கிற சாந்தலட்சுமி சுயஉதவிக்குழுப் பெண்கள் செலுத்திய முதல் 10 தவணைகளை நிதி நிறுவனத்துக்கு முறையாகச் செலுத்திவிட்டு, மீதமுள்ள 10 தவணைகளை வசூல் செய்து தலைமறைவாகிவிட்டார். கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் வரை அவர் எங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதனால், நிதி நிறுவனத்திலிருந்து எங்களைப் பணம் கட்டச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்கள். ஏற்கெனவே, கொரோனாவால் சரியாக வேலையில்லாமல் வருமானம் குறைந்து அல்லாடிவருகிறோம். இந்தநிலையில், இப்படி எங்க பணத்தை சாந்தலட்சுமி எடுத்துக்கொண்டு கம்பிநீட்டிவிட்டார். அவரைக் கண்டுபிடித்து, எங்க பணத்தை மீட்பதோடு, அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு