Published:Updated:

கரூர்:`கந்துவட்டிக் கொடுமை தாங்க முடியலை' - செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர்

சேகர்
சேகர்

``40,000 ரூபாய்க்கு பதிலாக வட்டியுடன் சேர்த்து ஒரு லட்சம் பணம் கேட்கிறார்” என்று கூறி, ராயனூரிலுள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்துகொள்வதாக சேகர் பயமுறுத்தினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கரூரில், 'கந்துவட்டிக் கொடுமை தாங்க முடியவில்லை' என்று கூறி, செல்போன் டவர் மீது ஏறி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின், தீயணைப்புத்துறையினரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பிறகு, அந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

தங்கமுத்து
தங்கமுத்து
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்தில், கந்துவட்டிக் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். அதைத் தடுக்கவும், அதற்கு எதிராகப் போராடவும் பல்வேற்று அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து ஒரு கூட்டியக்கம் தொடங்கியுள்ளனர். அதோடு, கந்துவட்டிப் பிரச்னையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதற்கு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் உத்தரவின்பேரில், கரூர் மாவட்ட காவல்துறையினரும் கந்துவட்டிப் புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இந்தநிலையில், கரூரை அடுத்த ராயனூர் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் தங்கமுத்து என்பவர், அதே ஊரைச் சேர்ந்த மதன் என்பவரிடம் பத்து வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நிலப்பத்திரத்தை அடமானம்வைத்து ரூபாய் 3 லட்சம் கடனாகப் பெற்றுக்கொண்டதாகவும், பணத்தைத் திருப்பிச் செலுத்திய பின்பு, வட்டிப் பணம் ரூபாய் 40,000 மட்டும் தர வேண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த செல்போன் டவர்
அந்த செல்போன் டவர்
நா.ராஜமுருகன்

இந்தச் சூழலில், 'மதன் 40,000 ரூபாய்க்கு பதிலாக வட்டியுடன் சேர்த்து ஒரு லட்சம் பணம் கேட்கிறார்' என்று கூறி, ராயனூரிலுள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்துகொள்வதாக சேகர் பயமுறுத்தினார். தொடர்ந்து, அங்கேயே அமர்ந்து 30 நிமிடங்கள் வரை, `கந்துவட்டி பிரச்னையை தீர்க்கலைன்னா, இங்கருந்து கீழே குதித்து தற்கொலை பண்ணிக்குவேன்' என்று கூறி மிரட்டினார். இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கரூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸார், அமைதியாகப் பேசி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சேகரை மீட்டு, அவரை குடும்பத்தினருடன் அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக தாந்தோணிமலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கந்துவட்டிக் கொடுமைக்காக ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`கந்துவட்டி கேட்டு மிரட்டினால் குண்டர் சட்டம் பாயும்!' - எச்சரிக்கும் தூத்துக்குடி எஸ்.பி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு