Published:Updated:

`திருமணச் செலவு பணம் ரூ.1 லட்சம்;150 குடும்பங்களுக்கு உதவி!'-ஈழத்தமிழர்களை நெகிழவைத்த புதுமணத்தம்பதி

ஈழத்தமிழர்களுக்கு உதவும் சிவக்குமார், மகாலட்சுமி தம்பதி
ஈழத்தமிழர்களுக்கு உதவும் சிவக்குமார், மகாலட்சுமி தம்பதி ( நா.ராஜமுருகன் )

'நீங்கள் நல்லா இருக்கணும்'னு எங்களை வாழ்த்தினப்ப, எங்கள் திருமண பந்தம் முழுமையடைந்ததாக தோணுச்சு. இதற்கு ஆலோசனை சொன்ன என் மனைவியின் பரிவுகாட்டும் உள்ளத்தை நினைத்துப் பெரும்மகிழ்ச்சியடைந்துள்ளேன்.

தனது திருமணச் செலவுக்காக வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயில், அகதிகள் முகாமில் வசிக்கும் 150 ஈழத்தமிழர் குடும்பங்களுக்கு, அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட உணவு தேவைக்கான பொருள்களை வழங்கி, அந்த மக்களை நெகிழ வைத்திருக்கிறார், கரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். தனது மனைவிதான், அகதிகள் முகாமில் வசிக்கும் அந்த மக்களுக்கு, திருமணச் செலவுக்காக வைத்திருந்த தொகையில், உதவிகளை வழங்கச் சொன்னதாக அந்த இளைஞர் தெரிவிக்கிறார்.

ஈழத்தமிழர்களுக்கு உதவும் சிவக்குமார், மகாலட்சுமி தம்பதி
ஈழத்தமிழர்களுக்கு உதவும் சிவக்குமார், மகாலட்சுமி தம்பதி
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், மண்மங்கலத்தைச் சேர்ந்தவர், சிவக்குமார். இவர் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தில் உறுப்பினராக இருக்கிறார். இவருக்கும், குளித்தலை அருகில் உள்ள புனவாசிப்பட்டியைச் சேர்ந்த மகாலட்சுமிக்கும் கடந்த மார்ச் 30 - ஆம் தேதி திருமணம் செய்ய முடிவானது. தனது திருமணத்தை உறவினர்கள், நண்பர்களை அழைத்து, பிரமாண்டமாக நடத்த நினைத்த சிவக்குமார். 1,500 பத்திரிகைகளை அச்சடித்து, விநியோகித்தார்.

`5 நாளா சாப்பிடலண்ணே!' - கதறிய சர்க்கஸ் குழந்தைகள்; பிராணிகளுக்கும் சேர்த்து உணவளித்த கரூர் ஆய்வாளர்

மகாலட்சுமி வீட்டிலும், 1000 பத்திரிகைகளை அச்சடித்து, விநியோகம் செய்திருக்கிறார்கள். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட, 20 பேரைக் கொண்டு எளிமையாக திருமணத்தை நடத்த, இருவீட்டாரும் முடிவு எடுத்தனர். அதன்படி, 20 பேர் கலந்துகொண்டு, அய்யர்மலை சிவன் கோயிலில் வைத்து, சிவக்குமார் மற்றும் மகாலட்சுமி திருமணம் எளிமையான முறையில் நடத்தப்பட்டது. இந்த நிலையில், தனது திருமணச் செலவுக்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை, ஏதாவது நல்ல காரியத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று சிவக்குமார் நினைத்திருக்கிறார்.

சிவக்குமார், மகாலட்சுமி திருமணம்
சிவக்குமார், மகாலட்சுமி திருமணம்
நா.ராஜமுருகன்

அதை தனது மனைவி மகாலட்சுமியிடம் தெரிவிக்க, 'எங்க ஊர் பக்கத்துல உள்ள இரும்பூதிப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், 150 ஈழத்தமிழர்கள் வசிக்கிறாங்க. எல்லோரும் கூலி வேலை பார்ப்பவர்கள். ஊரடங்கு அமலில் இருப்பதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும். சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு உதவலாம்' என்று சொல்லியிருக்கிறார்.

மனைவியின் நல்ல உள்ளத்தைப் பாராட்டிய சிவக்குமார், உடனே அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். தான் இருக்கும் சட்ட விழிப்புணர்வு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபாரதி, குளித்தலை டி.எஸ்.பி கும்மராஜா உள்ளிட்டவர்களையும் வைத்துக்கொண்டு, இரும்பூதிப்பட்டியில் உள்ள 150 ஈழத்தமிழர் குடும்பங்களுக்கும் பத்து நாள்களுக்குத் தேவையான அரிசி, மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகளை, சிவக்குமார், மகாலட்சுமி புதுமணத் தம்பதியர் வழங்கியிருக்கிறார்கள்.

இதுகுறித்து, சிவக்குமாரிடம் பேசினோம்.

``சொந்தபந்தங்களை அழைத்து, அவர்களின் ஆசியோடு எங்களின் திருமணத்தை விமரிசையாக நடத்த நினைத்தோம். ஆனால், கொரோனாவால் அது முடியாமல் போயிட்டு. இதனால், 'திருமணத்தை நல்லா நடத்த முடியலையே'ங்கிற வருத்தம் இருந்துச்சு. ஆனால், நமது தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்களின் பசியைப் போக்க முடிந்ததே என்ற சந்தோஷம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும், 'நீங்கள் நல்லா இருக்கணும்; நெடுங்காலம் வாழணும்'னு எங்களை வாழ்த்தினப்ப, எங்கள் திருமணப் பந்தம் முழுமையடைந்ததாக தோணுச்சு.

ஈழத்தமிழர்களுக்கு உதவும் சிவக்குமார், மகாலட்சுமி தம்பதி
ஈழத்தமிழர்களுக்கு உதவும் சிவக்குமார், மகாலட்சுமி தம்பதி
நா.ராஜமுருகன்

இதற்கு ஆலோசனை சொன்ன என் மனைவியின் பரிவு காட்டும் உள்ளத்தை நினைத்துப் பெரும்மகிழ்ச்சி அடைந்துள்ளேன். 'மனைவி சொல்லே மந்திரம்'னு நினைச்சு, நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு உதவியிருக்கிறோம். திருமணத்துக்கு வைத்திருந்த பணத்தில் உண்மையில் ஒரு நல்ல காரியத்தைச் செய்த திருப்தி ஏற்பட்டிருக்கிறது" என்றார், உணர்ச்சிமேலிட!.

மகாலட்சுமி கூறுகையில், ``சாதாரண காலங்களிலேயே அந்த மக்கள் கஷ்டப்படுவாங்க. ஊரடங்கால் கண்டிப்பாக கஷ்டப்படுவாங்கனு நினைச்சுதான், தயங்கிகிட்டே, 'அவங்களுக்கு உதவலாம்'னு என் கணவர்கிட்ட ஆலோசனை சொன்னேன்.

ஈழத்தமிழர்களுக்கு உதவும் சிவக்குமார், மகாலட்சுமி தம்பதி
ஈழத்தமிழர்களுக்கு உதவும் சிவக்குமார், மகாலட்சுமி தம்பதி
நா.ராஜமுருகன்

என் கணவர் உடனே அதற்கு சம்மதம் சொன்னதோடு, அந்த மக்களுக்கு எங்கள் திருமணச் செலவுக்காக வைத்திருந்த பணத்தில் உதவிகளைச் செய்தார். எங்கள் திருமணம் நிகழ்வு இதன்மூலம் முழுமையடைந்திருப்பதாக நினைக்கிறேன். மகிழ்ச்சி" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு