Published:Updated:

சராசரியைவிட கரூரில் அதிக மழைப் பொழிவு; நிரம்பும் நீர்நிலைகள்; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

கடந்த பத்து நாள்களாகக் கரூரில் கனமழை பெய்ய, வழக்கமாகப் பெய்யும் சராசரி மழையளவைவிட, அதிகம் பெய்திருக்கிறது. அய்யர்மலை தெப்பக்குளம் கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு, அதன் முழுகொள்ளளவையும் எட்டியிருக்கிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வறட்சிமிகுந்த மாவட்டமான கரூரில் வழக்கமாகப் பெய்யும் சராசரி மழைப்பொழிவைவிட 116.67 மி.மீ கூடுதலாக மழை பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் வறட்சியான மாவட்டங்களில் ஒன்று. இங்கு காவிரி, நொய்யல், அமராவதி உள்ளிட்ட மூன்று ஆறுகள் பாய்ந்தாலும், இங்குள்ள 70 சதவிகிதப் பகுதிகள் வறட்சியான பகுதிகள். வானம் பார்த்த பூமியை அதிகம் கொண்ட மாவட்டம். இதனால், வருடாவருடம் இங்கு மிகக்குறைவாகவே மழை பெய்யும். இதனால், இங்குள்ள பல நீர்நிலைகள் வறண்டே காணப்படும். அதேபோல், தமிழ்நாட்டிலேயே அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக இங்குள்ள க.பரமத்தி, கடந்த சில ஆண்டுகளாக மாறிவருகிறது. இந்தச் சூழலில்தான், கடந்த பத்து நாள்களாகக் கரூரில் கனமழை பெய்ய, வழக்கமாகப் பெய்யும் சராசரி மழையளவைவிட, அதிகம் பெய்திருக்கிறது.

 அய்யர்மலை தெப்பக்குளம்
அய்யர்மலை தெப்பக்குளம்

அய்யர்மலை தெப்பக்குளம் கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு, அதன் முழுகொள்ளளவையும் எட்டியிருக்கிறது. இப்படி பல நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதேபோல், ஆத்துப்பாளையம் அணை நிரம்பியுள்ளதால், அதை இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி பாசனத்துக்காகத் திறந்து வைத்துள்ளார். இப்படி, கரூர் மாவட்டத்துக்குத் தேவையான மழை பெய்துள்ளதால், விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மானாவாரியாகப் போட்டுள்ள பயிர்களுக்கெல்லாம் இந்த மழைநீர் வரப்பிரசாதமாக உள்ளது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். வடகிழக்குப் பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையருமான ராஜேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கரூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், வீடுகள் சேதம் குறித்தும், சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர், கடந்த காலங்களில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகள், தற்போது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் பகுதிகளில் எந்தவகையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் ஒவ்வொரு துறை வாரியாக ஆய்வு செய்தார்.

 அய்யர்மலை தெப்பக்குளம்
அய்யர்மலை தெப்பக்குளம்
50 மாணவர்கள்; 116 மரங்கள்; அரசுப்பள்ளியில் மாணவர்களே உருவாக்கிய பழத்தோட்டம்!

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மழைநீரால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கும் வகையில், கிராமங்கள் அளவில் மொத்தம் 1,765 பேர், முதல் தகவல் தெரிவிக்கும் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளாக 76 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக்குழுவினர் 73 பேர் தயார் நிலையில் உள்ளார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கரூர் மாவட்டத்தில் ஓர் ஆண்டில் பெய்யும் மழையின் சராசரி அளவு 652.2 மி.மீ ஆகும். ஆனால், தற்போது 768.87 மி.மீ அளவில் மழைபெய்துள்ளது. இது சராசரியைவிட 116.67 மி.மீ அளவு கூடுதலாகும். மழைக்காலத்துக்கு முன்பே மாபெரும் தூர்வாரும் திட்டத்தின் மூலம் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால்கள் முழுவதும் தூர்வாரப்பட்டதால், தற்போது வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மழைநீர் எளிதில் வடிந்து செல்ல பேருதவியாக உள்ளது.

 ராஜேஷ் ஆய்வு
ராஜேஷ் ஆய்வு
முல்லைப் பெரியாறு: 142 அடியை எட்டும் தண்ணீர்; 7 ஆண்டுகளில் 4-வது முறை; இன்றைய நிலவரம் என்ன?

தொடர்மழையால், இதுவரை 16 குடிசைகள் பகுதியளவிலும், ஒரு குடிசை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. குடிசை அல்லாத 46 வீடுகள் பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளுக்கு பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் பொருள்கள் தடையில்லாமல் அனுப்பப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு