Published:Updated:

`தடையை மீறி நோன்புக் கஞ்சி; தாசில்தாருக்கு எதிர்ப்பு' - கரூரில் 54 பேர் மீது பாய்ந்த வழக்கு

மைலம்பட்டி
மைலம்பட்டி

கரூர் மாவட்டம், மைலம்பட்டியில் ஊரடங்கு உத்தரவை மீறி ஒன்றாக தர்ஹா ஒன்றில் கூடி ரம்ஜான் நோன்புக் கஞ்சி தயாரித்ததாக 54 நபர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி நோன்புக் கஞ்சி தயாரிக்க ஒன்றுகூடியதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து கரூர் அருகே 54 பேர் மீது போலீஸார் 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிந்தாமணிப்பட்டி
சிந்தாமணிப்பட்டி

இந்தியாவில் கொரோனா பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த, வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டுமே வெளியில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

`இன்னும் 10 நாளில் சாந்திக்கு பிரசவம்!' - முதல்வரிடம் உதவிகேட்டு கோரிக்கை வைத்த ஜோதிமணி எம்.பி

ஆனால், அதையும் மீறி பலர் காரணமே இன்றி வெளியில் நடமாடுவது காவல்துறையினருக்குத் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. பலரும் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல், ஒன்றாகக்கூடி பிரியாணி சமைத்து சாப்பிடுவது, மீன் பிடித்து சுட்டு கூட்டாகச் சாப்பிடுவது என்று தனிமனித இடைவெளிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்கள்.

சிந்தாமணிப்பட்டி காவல் நிலையம்
சிந்தாமணிப்பட்டி காவல் நிலையம்

அந்தவகையில், கரூர் மாவட்டம், மைலம்பட்டியில் ஊரடங்கு உத்தரவை மீறி ஒன்றாக தர்ஹா ஒன்றில் கூடி ரம்ஜான் நோன்புக் கஞ்சி தயாரித்ததாக 54 நபர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`ஏப்ரல் 24 முதல் ரமலான் நோன்பு!' - உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

கரூர் மாவட்டம், மைலம்பட்டியில் தர்ஹா ஒன்று உள்ளது. அந்தக் கிராமத்தில் அதிக அளவு இஸ்லாமியர்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், மைலம்பட்டி கடைவீதியில் ரம்ஜான் நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்காக நேற்று இரவு 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி இருப்பதாக, கடவூர் வட்டாட்சியர் மைதிலிக்குத் தகவல் வந்திருக்கிறது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வட்டாட்சியர் மைதிலி, வருவாய் அலுவலர் பாலச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோருடன் சென்று இதுகுறித்து அவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், அங்கிருந்த இளைஞர்கள் சிலர், அதிகாரிகளை எதிர்த்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

மைலம்பட்டி
மைலம்பட்டி

அதேபோல், அங்கு கூடியிருந்தவர்கள் வட்டாட்சியர், வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய போலீஸாரிடம், கடவூர் வட்டாட்சியர் மைதிலி புகார் அளித்தார். அதன்பேரில், மைலம்பட்டியைச் சேர்ந்த சஞ்சியப்பா (60), அன்சார் அலி (43), உதுமான் அலி (70), சைலாபுதீன் (63), கமருதீன் (65) உள்ளிட்ட 54 பேர் மீது கொரோனா நோயைப் பரப்பும் நோக்கம், ஊரடங்கை மீறி அதிக அளவில் ஒன்றுகூடியது, தொற்று நோய்த் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் 54 பேர் மீது ஆறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு