Published:Updated:

கரூர்: கனமழை, குளம்போல் தேங்கிய மழைநீர்! - வெள்ளம் வடியாததால் பள்ளிக்கு விடுமுறை அளித்த அவலம்!

பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் ( நா.ராஜமுருகன் )

கனமழை காரணமாக அரசுப் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியதால், நேற்று மதியத்துக்கு மேல் அந்தப் பள்ளிக்கு, நிர்வாகம் விடுமுறை அளித்ததாகச் சொல்லப்படும் தகவல், சமூக ஆர்வலர்களை கொதிக்கவைத்திருக்கிறது.

கரூர்: கனமழை, குளம்போல் தேங்கிய மழைநீர்! - வெள்ளம் வடியாததால் பள்ளிக்கு விடுமுறை அளித்த அவலம்!

கனமழை காரணமாக அரசுப் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியதால், நேற்று மதியத்துக்கு மேல் அந்தப் பள்ளிக்கு, நிர்வாகம் விடுமுறை அளித்ததாகச் சொல்லப்படும் தகவல், சமூக ஆர்வலர்களை கொதிக்கவைத்திருக்கிறது.

Published:Updated:
பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் ( நா.ராஜமுருகன் )

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. மழை ஒவ்வொரு பகுதியையும் பாதித்துவருவதால், இன்று இந்த மாவட்டக் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை, நாளை அந்த மாவட்டக் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை என்று அறிவிப்பு வந்துகொண்டிருக்கிறது. கரூரில் மழை பெய்தாலும், பள்ளி விடுமுறை விடும் அளவுக்கு இங்கு பெய்யவில்லை. ஆனால், கரூரில் கடந்த மூன்று நாள்களாக பகல் நேரங்களில் லேசான சாரல் மழையும், இரவு நேரத்தில் கனமழையும் பெய்துவருகிறது.

அந்த பள்ளி
அந்த பள்ளி
நா.ராஜமுருகன்

இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியிருக்கிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் தாந்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கனமழை காரணமாக மழைநீர் குளம்போலத் தேங்கியிருக்கிறது. 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்தப் பள்ளியில் பயின்றுவருகின்றனர்.

முழங்கால் அளவு மழைநீரில் நேற்று முன்தினமும், நேற்று காலையும் இந்தப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள், ஆசிரியப் பெருமக்கள் வந்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்துக்குப் பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இதுவரை தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், தேங்கியுள்ள மழைநீரில் அட்டை, பூச்சிகள், பாம்பு உள்ளிட்டவை வெளியேறும் என்ற அச்சம் காரணமாக, நேற்று மதியத்துக்கு மேல் மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அளித்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேங்கியுள்ள மழைநீரை விரைவில் மாநகராட்சி நிர்வாகம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர்
பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர்
நா.ராஜமுருகன்

மேலும், இந்தப் பள்ளியில் ஆசிரியர்களும், பயிலும் மாணவர்களும் அச்சத்தில் உள்ளனர். அதனால், இந்தப் பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை உடனே அப்புறப்படுத்துவதோடு, பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காதவாறு செய்ய நிரந்தர நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.