Published:Updated:

`ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய இளைஞர்கள்... பண உதவி செய்த காவலர்கள்!' - ஊரடங்கில் நெகிழ்ச்சி

பணஉதவி செய்யும் ட்ராஃபிக் போலீஸார்
பணஉதவி செய்யும் ட்ராஃபிக் போலீஸார் ( நா.ராஜமுருகன் )

தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள், காலையில் 800 பேருக்கு சிற்றுண்டி, மதியம், இரவு வேளைகளுக்கு 1,000 பேருக்குச் சாப்பாடு வழங்கினார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மக்கள் ஊரடங்கின்போது உணவின்றித் தவித்த ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய இளைஞர்களுக்கு, பாதுகாப்பு பணியில் இருந்த ட்ராஃபிக் போலீஸார் பண உதவி செய்த சம்பவம், கரூர் மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உணவு வழங்கும் இளைஞர்கள்
உணவு வழங்கும் இளைஞர்கள்
நா.ராஜமுருகன்

கொரோனா வைரஸ், இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி, நேற்று மக்கள் பங்களிப்போடு சுய ஊரடங்கு அறிவித்திருந்தார். நாடு முழுவதும் மக்கள் அதை உறுதியுடன் கடைப்பிடித்தனர்.

உணவு வழங்கும் இளைஞர்கள்
உணவு வழங்கும் இளைஞர்கள்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்திலும் நேற்று சுய ஊரடங்கு, மக்களால் உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், வீடில்லாமல், பிளாட்பாரம், பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள், முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் உணவின்றி தவித்தார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`காலையில் 800 டிபன்; மதியம் 1,000 சாப்பாடு!' - ஊரடங்கில் ஆதரவற்றவர்களை நெகிழவைத்த கரூர் இளைஞர்கள்

அவர்களின் நிலையை உணர்ந்த கரூரைச் சேர்ந்த `இணைந்த கைகள்’, `ஒன்ஸ்ஸ்டெப் அறக்கட்டளை’ மற்றும்’ கரூர் இளைய தலைமுறை’ ஆகிய தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள், காலையில் 800 பேருக்கு சிற்றுண்டி, மதியம், இரவு வேளைகளுக்கு 1,000 பேருக்குச் சாப்பாடு வழங்கினார்கள்.

கைத்தட்டும் ட்ராஃபில் போலீஸார்
கைத்தட்டும் ட்ராஃபில் போலீஸார்
நா.ராஜமுருகன்

கரூர் நகரில் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டிருந்த ட்ராஃபிக் பிரிவு ஆய்வாளரான மாரிமுத்து, துணை ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் இதைக் கேள்விப்பட்டு, அந்த இளைஞர்களை அழைத்துப் பாராட்டினர். அதோடு, தங்கள் பங்காக பாக்கெட்டில் இருந்த 1,200 ரூபாயை அந்த இளைஞர்களிடம் வழங்கி உற்சாகப்படுத்தினர்.

``ஊடங்கு உத்தரவின்போது, ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் உணவின்றி தவிப்பார்களே என்றுதான் இந்த முயற்சியில் இறங்கினோம். போக்குவரத்து காவலர்களும் இந்தப் பணியை அங்கீகரித்து பாராட்டியது எங்களுக்கு உற்சாகமளித்தது.

உணவு வழங்கும் இளைஞர்கள்
உணவு வழங்கும் இளைஞர்கள்
நா.ராஜமுருகன்

அதோடு, மாலை 5 மணிக்கு கொரோனா வைரஸை ஒழிக்க பாடுபடும் அத்தனை பேரையும் பாராட்டும் வகையில் எங்களோடு சேர்ந்து போக்குவரத்து காவலர்களும் வரிசையில் நின்று கைத்தட்டினார்கள்...” என்று அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நெகிழ்ந்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு