Published:Updated:

முன்னாள் ராணுவ வீரரிடம் லஞ்சம் - நில அளவையரைப் பொறிவைத்துப் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

கரூர்

கரூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரிடம் தனிப் பட்டா மாற்ற லஞ்சம் கேட்ட நில அளவையரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், பொறிவைத்துப் பிடித்துள்ளனர்.

முன்னாள் ராணுவ வீரரிடம் லஞ்சம் - நில அளவையரைப் பொறிவைத்துப் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

கரூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரிடம் தனிப் பட்டா மாற்ற லஞ்சம் கேட்ட நில அளவையரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், பொறிவைத்துப் பிடித்துள்ளனர்.

Published:Updated:
கரூர்

கரூர் - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள எல்.வி.பி நகர் பகுதியில் வசிப்பவர் சரவணன் (வயது 46). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர், தனது நிலத்தை கூட்டுப் பட்டாவிலிருந்து தனிப் பட்டாவுக்கு மாற்ற, நில அளவையர் துறையை அணுகியிருக்கிறார். அங்குள்ள ஃபீல்டு சர்வேயரான ரவி (40) என்பவர், இந்தத் தனிப் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. முதலில் ரூ. 8 ஆயிரம் கேட்டாராம். ஆனால், சரவணன், 'அவ்வளவு முடியாது' என்று கூற, இறுதியில் `ரூ.5 ஆயிரம்தான் இறுதி’ என்று கூறி, 'பணத்துடன் வாருங்கள்... உடனே மாற்றித்தருகிறேன்' என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.

கரூர்
கரூர்

ஆனால், பட்டா மாறுதலுக்கு லஞ்சம் தர விரும்பாத சரவணன், இது குறித்து கரூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் கூறியிருக்கிறார். இதனால், ரவியைக் கையும் களவுமாக பிடிக்க நினைத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி நடராஜன் தலைமையிலான போலீஸார், முன்னாள் ராணுவ வீரர் சரவணனைப் பணத்துடன் செல்லச் சொல்லியிருக்கின்றனர். அதோடு, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மறைந்து நின்றுள்ளனர். இந்த நிலையில், சரவணன் ரசாயனம் தடவப்பட்ட பணத்தை ரவியிடம் கொடுக்க, அந்த நேரம் அங்கே வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ரவியை மடக்கிப் பிடித்தனர். மேலும், ரவியின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, ரவியைக் கைதுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism