Published:Updated:

`இதுவும் என் பொறுப்புதான்!' - பள்ளி வளாகத்தை தனியொருவராக தூய்மைப்படுத்திய தலைமை ஆசிரியர்

கடந்த வருடம் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று இவர் பாடம் நடத்த, அது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வரை பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லாக்டௌன் காரணமாகவும், தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வராததாலும், தான் பணிபுரியும் அரசுப் பள்ளி வளாகத்தில் சேர்ந்திருந்த குப்பைகளை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரே களத்தில் இறங்கி சுத்தப்படுத்திய நிகழ்வு, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே, கடந்த வருடம் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று இவர் பாடம் நடத்த, அது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வரை பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தூய்மை பணியில் கோ.மூர்த்தி
தூய்மை பணியில் கோ.மூர்த்தி

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் திருப்பூர் மாவட்டத்தையொட்டி கரூர் மாவட்ட எல்லையாக இருக்கும் கிராமம் தொட்டியபட்டி. இந்த கிராமத்தில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரான கோ.மூர்த்திதான், தனியாளாக பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்திய அந்த ஆசிரியர். அவரிடம் பேசினோம்.

``கரூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் சிறிய கிராமம் தொட்டியபட்டி. இங்கு நான் பணிக்கு வருவதற்கு முன்பு சொற்ப அளவில்தான் மாணவர்கள் இருந்தார்கள். ஆசிரியர்கள், கிராம மக்கள், பெற்றோர்கள் எனப் பல தரப்போடும் இணைந்து செயல்பட்டுதான் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினோம். ஒரே ஒரு கட்டடம் மட்டும்தான் இருந்தது. தனியார் ஸ்பான்ஸர் மூலமாக இன்னொரு கட்டடம் கட்டினோம்.

கோ.மூர்த்தி
கோ.மூர்த்தி

கல்வி கற்கும் முறையை மாணவர்களுக்குப் பிடிக்கும் வகையில் செய்தோம். இதனால், தனியார் பள்ளியில் படித்த தங்கள் பிள்ளைகளை பல பெற்றோர்க்ள் டி.சி வாங்கிக்கொண்டு இங்க சேர்த்தார்கள். பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தெல்லாம் ஆட்டோவில் வந்து மாணவர்கள் இங்கு சேர்ந்தார்கள். மாணவர்களுக்குத் தனித்திறமைகளை வளர்க்க ஆரம்பித்தோம். ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பெரிய லட்சியங்களை சிறுபிராயத்திலேயே மாணவர்களின் மனதில் பதிய வைக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படி, ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் வந்த என்னைப் பற்றிய செய்தியை டேக் செய்த இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, என்னையும், எங்கள் பள்ளியையும் பாராட்டியிருந்தார். அது பெரிய உற்சாகமாக இருந்தது. இந்த நிலையில்தான், இரண்டாவது கொரோனா அலை வந்து, இந்த வருடமும் லாக்டௌன் அறிவித்தார்கள். மற்ற மாவட்டங்களில் ஆசிரியர்களை அவரவர் பணிபுரியும் பள்ளிகளுக்கு வர உத்தரவு போட்டார்கள். ஆனால், கரூர் மாவட்டம் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஒன்றாக இருந்ததால், சமீபத்தில்தான் இந்த மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களை பணிக்கு வர அரசு உத்தரவிட்டது.

தொட்டியபட்டி அரசுப் பள்ளி
தொட்டியபட்டி அரசுப் பள்ளி
`கோச்சுக்காதீங்க... பள்ளியில் இடமில்ல!' - மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு தொடக்கப் பள்ளி

அதோடு, மாணவர் மன்றம், மாணவர்கள் நடத்தும் நாடாளுமன்றம் என்று அரசியல் விஷயங்களையும் அவர்களுக்குப் புரிய வைக்கிறோம். இதனால், மாணவர்கள் எல்லோரும் நன்றாகப் படிக்கிறார்கள். கடந்த வருடம் கொரோனா வந்து லாக்டௌன் போட்டதால், மாணவர்கள் வீட்டில் இருந்தார்கள். அதனால், நான் எனது காரில் புத்தகங்களை எடுத்துப்போய் ஒவ்வொரு மாணவர் வீட்டிலும் கொடுத்ததோடு, அவர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே வைத்துப் பாடம் நடத்தினேன். இது பல பத்திரிகைகளில் செய்தியாக வந்தது.

அப்படி பள்ளிக்குப் போன எனக்கு, பள்ளி வளாகம் முழுக்க, இரண்டு கட்டடங்களையும் சுற்றி ஆலமரச் சருகுகளும், குப்பைகளும் சூழ்ந்து கிடந்ததை எப்படி அப்புறப்படுத்துவது என்று மலைப்பு ஏற்பட்டது. இங்குள்ள தூய்மைப் பணியாளர்களும் உடம்பு சுகமில்லாத காரணத்தால் பள்ளிக்கு வரவில்லை. இதனால், நானே களத்தில் இறங்கி, இதை சுத்தப்படுத்துவது என்று முடிவு பண்ணினேன். அதன்படி, விளக்குமறி, தென்னை குருத்தோலைகளை வைத்து, பள்ளி வளாகம் முழுக்க சுத்தப்படுத்த தொடங்கினேன்.

எல்லா இடங்களிலும் குப்பைகள் நிறைந்திருந்ததால், மூன்று நாள்கள் தொடர்ந்து வேலை செய்து, பள்ளி வளாகம் முழுக்க இருந்த குப்பைகளையும், இலை, சருகுகளையும் சுத்தப்படுத்தினேன். கூட்டிப் பெருக்கிய குப்பைகளை ஓரிடத்தில் சேர்த்து, தீவைத்து அனைத்து குப்பைகளையும் அழித்தேன். அதைப் பார்த்துட்டு மாணவர்கள் சிலர் வந்து, `ஏன் சார் இந்த வேலையை நீங்க செய்றீங்க? நாங்க சுத்தப்படுத்துறோம். நீங்க ஓய்வெடுங்க' என்றார்கள். ஆனால் தூசியால் ஒவ்வாமை ஏற்படலாம் என்பதால் மறுத்து அவர்களை அனுப்பிவிட்டு, பள்ளி வளாகத்தைச் சுத்தப்படுத்தினேன். அதை மாணவர்கள் வீடியோ எடுத்து லோக்கல் வாட்ஸ்அப் குரூப்புகளில் பரப்பிவிட்டார்கள்.

தூய்மை பணியில் கோ.மூர்த்தி
தூய்மை பணியில் கோ.மூர்த்தி
`அப்போ 2 மாணவர்கள்; இப்போ 66 மாணவர்கள்!' - அரசுப்பள்ளி சாதித்தது எப்படி?

இது ஒரு சாதாரண விசயம். இந்தப் பள்ளிக்கு நான்தான் தலைமை ஆசிரியர். அதனால், இதுவும் என் பொறுப்புதான். `சுத்தம், சுகாதாரம் அவசியம்' என்று வெறும் ஏட்டில் இருப்பதை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க மட்டும் நாங்கள் ஆசிரியர்கள் தேவை இல்லை. அதை செயலில் காட்டி மாணவர்களுக்கு உணர்த்தும்போது, அதே செயலை அவர்களும் செய்வார்கள்" என்றார்.

வாழ்த்துகள் ஆசிரியரே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு