Published:Updated:

`கைவிரித்த அரசு; கிணற்றைத் தூர்வாரிய இளைஞர்கள்!' - மக்களுக்கு கைகொடுக்கும் 4,000 லிட்டர் நீர்

கிணற்றைத் தூர் வாரும் இளைஞர்கள்
கிணற்றைத் தூர் வாரும் இளைஞர்கள் ( நா.ராஜமுருகன் )

'எங்கள் ஊருக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தாங்க'னு அரசு, மாவட்ட நிர்வாகம்னு பல தரப்புக்கும் மனுமேல மனுவா அனுப்பினாங்க. ஒண்ணும் நடக்கலை. இளைஞர்கள் நாங்களே களத்தில் இறங்கி, கிணற்றை தூர் வாரி, ஊர் மக்களின் பலவருட குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம்.

வறட்சி மிகுந்த தங்களுடைய கிராமத்தில் மக்கள் குடிநீருக்காக அல்லாடிய மக்களின் தாகத்தைப் போக்க, இளைஞர்களே சேர்ந்து கடந்த 30 வருடங்களாகத் தூர்ந்து கிடந்த கிணற்றைத் தூர் வாரி, மக்களை நெகிழ்ச்சிக்கு ஆட்படுத்தியிருக்கிறார்கள். அரசு குடிநீர் ஏற்பாடு செய்ய இந்தக் கிராமத்துக்கு கைவிரித்த நிலையில், இளைஞர்களின் முயற்சியால் அந்தக் கிணற்றில் இருந்து தினமும் 4,000 லிட்டர் வரை குடிநீர் கிடைக்கிறது.

கிணற்றைத் தூர் வாரும் இளைஞர்கள்
கிணற்றைத் தூர் வாரும் இளைஞர்கள்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது, அய்யம்பாளையம். இந்தக் கிராமத்தில் சுமார் 400 பேர் வசிக்கிறார்கள். வறட்சி மிகுந்த கிராமங்களில் ஒன்றான இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பல வருடங்களாகக் குடிநீர் பிரச்னையால் அல்லாடி வருகிறார்கள். குடிநீருக்காகப் பக்கத்து கிராமங்களுக்கு குடங்களோடு, இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அலைந்து வருகிறார்கள்.

'மாவட்டத்துக்கு ஒரு விவசாயி; மருந்தில்லா விவசாயம்!' -சகாயம் ஐஏஎஸ் முன்னெடுக்கும் 'கலப்பைத் திட்டம்'

அதுவும், கோடைக்காலம் வந்துவிட்டால், இந்தக் கிராமத்தில் குடிநீர் பிரச்னை இன்னும் அதிகரித்துவிடும். இந்த நிலையில்தான், தங்களது கிராமத்துக்குத் தேவையான போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரும்படி அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும், இந்தக் கிராம மக்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தார்கள்.

கிணற்றைத் தூர் வாரும் இளைஞர்கள்
கிணற்றைத் தூர் வாரும் இளைஞர்கள்
நா.ராஜமுருகன்

அதுவும், கோடைக்காலம் வந்துவிட்டால், இந்தக் கிராமத்தில் குடிநீர் பிரச்னை இன்னும் அதிகரித்துவிடும். இந்த நிலையில்தான், தங்களது கிராமத்துக்குத் தேவையான போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரும்படி அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும், இந்தக் கிராம மக்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தார்கள்.

ஆனால், யாரும் இவர்களின் பிரச்னையைத் தீர்க்க முன்வரவில்லை. இந்த நிலையில், கொரோனா பிரச்னையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், குடிநீருக்காக வெளி ஊர்களுக்கு இந்தக் கிராம மக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்த கிராம மக்களும் தாகத்தில் தவித்திருக்கிறார்கள். தங்கள் கிராம மக்களின் தாகத்தைத் தணிக்க நினைத்த, அய்யம்பாளையத்தைச் சேர்ந்த 25 இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, 30 வருடங்களாகப் பயன்பாடின்றி தூர்ந்து கிடந்த ஊர் பொதுக்கிணற்றைத் தூர் வாரி, கிராம மக்களுக்குத் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்து அசத்தியிருக்கிறார்கள். இப்போது, தினமும் அந்தக் கிணற்றில் இருந்து 4,000 லிட்டர் வரை குடிநீர் கிடைக்கிறது.

 கிணற்றின் அருகில் மக்கள்
கிணற்றின் அருகில் மக்கள்
நா.ராஜமுருகன்

தங்கள் கிராம மக்களின் தாகத்தைத் தணிக்க நினைத்த, அய்யம்பாளையத்தைச் சேர்ந்த 25 இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, 30 வருடங்களாகப் பயன்பாடின்றி தூர்ந்து கிடந்த ஊர் பொதுக்கிணற்றைத் தூர் வாரி, கிராம மக்களுக்குத் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்து அசத்தியிருக்கிறார்கள். இப்போது, தினமும் அந்தக் கிணற்றில் இருந்து 4,000 லிட்டர் வரை குடிநீர் கிடைக்கிறது.

கிணற்றைத் தூர் வார முயற்சி எடுத்த 25 இளைஞர்களில் ஒருவரான சுதாகர், ``எங்கள் கிராம மக்கள் பல வருடங்களாகக் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையால் அவதியுற்று வருகிறார்கள். கொரோனா ஊரடங்கால், மக்கள் வெளியூர்கள் சென்று தண்ணீர் கொண்டு வர முடியவில்லை. இதனால், கடந்த இரண்டு மாதங்களாகக் குடிநீர் இல்லாமல் தவித்துப் போனார்கள். இதைப் பார்த்த, எங்க ஊர் இளைஞர்களான எங்களுக்கு வேதனையா போயிட்டு.

சுதாகர்
சுதாகர்
நா.ராஜமுருகன்

உடனே, 25 இளைஞர்களும் ஒன்றுகூடி, 'நம்ம ஊர் குடிநீர் பிரச்னையைப் போக்க என்ன பண்ணலாம்?'னு ஆலோசனை நடத்தினோம். அப்போதான், ஊர் மையத்தில் உள்ள, 'கடந்த 30 வருடங்களாகத் தூர்ந்து போய் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும், 60 அடி ஆழமுள்ள கிணற்றைத் தூர் வாருவது'னு முடிவு பண்ணினோம். அதன்படி, 25 இளைஞர்களும் ஒன்றுகூடி உழைத்து, இரண்டு நாள்களில் முழு கிணற்றையும் தூர் வாரி முடிச்சோம்.

சேறும் சகதியுமாக இருந்த கிணற்றின் தண்ணீர், இப்போ பால்போல் குடிக்க இனிமையா உள்ள நீராக மாறிட்டு. கிணற்றுக்குள்ள இறங்கி சிலர் மண்ணையும் சேறையும் அள்ளி பெரிய கூடை, வாளிகளில் வைப்பாங்க. அதை இரண்டு இளைஞர்கள் நுகத்தடி கட்டி, மாடுகள் போல் இழுப்பார்கள். அப்படியே இரண்டு நாள்கள் வேலை செய்தோம். முழுக்கிணறும் தூய்மையானது.சேறாக இருந்த தண்ணீர் இரண்டு நாள்களில் தெளிவாகி, இப்போது இளநீர்போல குடிக்க ஏதுவான நீராக மாறிட்டு. மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து, மக்களுக்கு குடிக்க வழங்குகிறோம். மீதம் உள்ள தண்ணீரை, நாங்க எங்க ஊரை செழுமையாக்க அமைத்துள்ள பூங்காவில் உள்ள மரக்கன்றுகளுக்கு விட்டு வருகிறோம்.

தூர் வாரப்பட்ட கிணற்றில் தண்ணீர்
தூர் வாரப்பட்ட கிணற்றில் தண்ணீர்
நா.ராஜமுருகன்

'எங்கள் ஊருக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தாங்க'னு எங்க ஊர் மக்கள் அரசு, மாவட்ட நிர்வாகம்னு பல தரப்புக்கும் மனுமேல மனுவா அனுப்பினாங்க. ஒண்ணும் நடக்கலை. அதான், இளைஞர்கள் நாங்களே களத்தில் இறங்கி, கிணற்றைத் தூர் வாரி, எங்க ஊர் மக்களின் பலவருட குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம்" என்றார் மகிழ்ச்சியாக.

அடுத்த கட்டுரைக்கு