Published:Updated:

`சீட்டுக்கு நடுவில் தடுப்பு, இலவச மாஸ்க், சானிடைஸர்!' - கரூர் இளைஞரின் டாக்ஸி சர்ப்ரைஸ்

பயணிகளுக்கு இடையில் பிளாஸ்டிக் சீட் தடுப்பு
பயணிகளுக்கு இடையில் பிளாஸ்டிக் சீட் தடுப்பு

காரை எடுப்பதற்கு முன்பும், ட்ரிப் முடிந்தபிறகும் காரைச் சுற்றி, ஒருவித கெமிக்கலை ஸ்ப்ரே செய்வேன். அதன்பிறகு, காருக்குள் ஏறும் பயணிகள், தங்கள் கைகளில் சானிடைஸரைப் பயன்படுத்த, ஸ்ப்ரே பாட்டிலை வைத்தேன்.

என்னதான் கொரோனா தனது கோரமுகத்தைக் காட்டினாலும், `அது நம்மை டச் பண்ணாது' என்ற அசாதாரணமான மனநிலையிலேயே பலரும் அதை எதிர்கொள்பவர்களாக இருக்கிறார்கள். சானிடைஸர் பயன்படுத்துவது, முகத்தில் மாஸ்க் அணிவது, கார்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பயணிகளை ஏற்றிச் செல்வது என்று கொரோனாவை எளிதான ஒன்றாக நினைத்தே கடக்கிறோம்.

சீட்டுகளுக்கு இடையில் பிளாஸ்டிக் சீட் தடுப்பு
சீட்டுகளுக்கு இடையில் பிளாஸ்டிக் சீட் தடுப்பு

இந்தநிலையில், தனது டாக்ஸிகளில் ஏறும் பயணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, காரில் சானிடைஸர், சீட்டுகளில் இரண்டு பயணிகளுக்கு இடையில் தடுப்பு, மாஸ்க் இல்லாமல் வரும் பயணிகளுக்கு மாஸ்க் வழங்குவது என அசத்தி வருகிறார் கரூர் இளைஞர் ஒருவர்.

`திருமணச் செலவு பணம் ரூ.1 லட்சம்;150 குடும்பங்களுக்கு உதவி!'-ஈழத்தமிழர்களை நெகிழவைத்த புதுமணத்தம்பதி

கரூர் சுங்ககேட் பகுதியைச் சேர்ந்தவர், வெங்கடேஷ். 25 வயது இளைஞரான இவர், 2 கார்களை வைத்து, டிராவல்ஸ் நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்பு காரணத்தினால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஆரம்பத்தில் டாக்ஸிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டது.

பயணிகளுக்கு மாஸ்க்
பயணிகளுக்கு மாஸ்க்

அதன்பிறகு, சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டபோது, விதிமுறைகளுடன் டாக்ஸிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. அப்போதிலிருந்தே பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில், தனது கார்களில் போதிய தடுப்பு நடவடிக்கைகளைச் செய்தார், வெங்கடேஷ். இப்போதும் பயணிகளின் நலன் கருதி, தொடர்ந்து செய்து வருகிறார்.

`பழைய டயர்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு!’ - செங்கல்பட்டு இளைஞரின் முயற்சி

வெங்கடேஷை சந்தித்துப் பேசினோம்.

``இரண்டு வருடங்களாகத்தான் இந்த டிராவல்ஸ் தொழிலை ரன் பண்ணிக்கிட்டு வருகிறேன். மாசம் 30,000 ரூபாய் வரை லாபம் கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை டெவலப் செய்ய இருந்தேன். இந்த நிலையில்தான், கொரோனா எங்க தொழிலை முடக்கியது. அதன்பிறகு, டிரைவரை தவிர்த்து இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்தபோது, நான் எனது கார்களில் சில பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தேன்.

வெங்கடேஷ்
வெங்கடேஷ்

காரை எடுப்பதற்கு முன்பும், ட்ரிப் முடிந்தபிறகும் காரைச் சுற்றி, ஒருவித கெமிக்கலை ஸ்ப்ரே செய்வேன். அதன்பிறகு, காருக்குள் ஏறும் பயணிகள், தங்கள் கைகளில் சானிடைஸரைப் பயன்படுத்த, ஸ்ப்ரே பாட்டிலை வைத்தேன். காருக்குள் உள்ள கைப்பிடிகள், முன்சீட்டுகள் அனைத்தையும் டிரிப்புகள் முடிந்தபிறகு, துணிகளில் சானிடைஸரை தடவி, அழுத்தமாக துடைப்பேன்.

அதேபோல், மாஸ்க்குகள் அணியாமல் பயணிகள் யாரும் வந்தால், நானே எனது செலவில் மாஸ்க்குகளைக் கொடுப்பேன். அதன்பிறகு, காரின் பின்சீட்டில் ஏறும் பயணிகள் அருகருகே அமராமல் இருப்பதைத் தடுக்க நடுவில், பிளாஸ்டிக் டிரான்ஸ்ஃபரன்ட் சீட்டால் அடைத்தேன். அதேபோல், முன் சீட்டுக்கும் பின்சீட்டுக்கும் இடையிலும் அந்த பிளாஸ்டிக் சீட்டால் அடைத்தேன்.

காரில் சானிடைஸர்
காரில் சானிடைஸர்

இப்படி பல்வேறு வகையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை எனது கார்களில் செய்ததால், பயணிகள் பயமின்றி எங்கள் கார்களில் ஏறிப் பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தனர். `கொரோனா முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது' என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும் வரை, இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எனது கார்களில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்" என்றார் உறுதியாக!

அடுத்த கட்டுரைக்கு