Published:Updated:

"படிச்சவங்களே, கொரோனா வராதுனு வெளியில் போவது கொடுமை!" -கரூர் சமூக ஆர்வலர் ஆதங்கம்

ராஜேஷ் கண்ணன் கொரோனா விழிப்புணர்வு
ராஜேஷ் கண்ணன் கொரோனா விழிப்புணர்வு

நம்மாழ்வார் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வரும் ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞர், கடந்த 24 ஆம் தேதியிலிருந்து, சொந்தச் செலவில் வாகனம் தயார் செய்து, அதில் மைக் செட் கட்டி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

கரூரில் சொந்தச் செலவில் அரசுக்கு இணையாக இளைஞர் ஒருவர் வாகனத்தில் மைக் கட்டி, 'யாரும் சுய ஊரடங்கை மீறும் விதமாக வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள்' என்று விழிப்புணர்வு செய்தார். ஆனால், மக்கள் பலரும் சர்வசாதாரணமாக வெளியில் நடமாட, "படித்தவர்களே, 'எங்களுக்கு கொரோனாவும் வராது, ஒண்ணும் வராது' என்று வெளியில் நடமாடுவதைப் பார்க்க வேதனையாக இருக்கு" என்று வேதனைப்படுகிறார்.

ராஜேஷ் கண்ணன் கொரோனா விழிப்புணர்வு
ராஜேஷ் கண்ணன் கொரோனா விழிப்புணர்வு

சீனாவில் உருவானதாகச் சொல்லப்படும் கொரோனா வைரஸ், இன்றும் உலகம் முழுக்கப் பரவி, மக்கள் அனைவரையும் தூக்கமில்லாமல் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ, அதன் வீரியத்தை உணர்ந்த மத்திய அரசு, அதைத் தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது. அதோடு, கடந்த 25 ஆம் தேதி நள்ளிரவிலிருந்து அடுத்து வரும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது.

தமிழக அரசும், கடந்த 24 ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருப்பதோடு, அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடி, சீல் வைத்துள்ளது. 'மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம்; உங்களுக்காக நாங்கள் வெளியே வேலை செய்துகொண்டிருக்கிறோம்' என்று மருத்துவத்துறை, காவல் மற்றும் சுகாதாரத் துறைகளைச் சேர்ந்தவர்கள், மக்களுக்குக் கைகூப்பி வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

ராஜேஷ் கண்ணன் கொரோனா விழிப்புணர்வு
ராஜேஷ் கண்ணன் கொரோனா விழிப்புணர்வு

ஆனால், அதைக் கேட்காமல் பலரும் வாகனங்களில், நடந்தும் வெளியில் நடமாடுவதால், போலீஸ் அவர்களை தோப்புக்கரணம் போடச் செய்தும், கேள்விகளைக் கேட்டும் விழிப்புணர்வுபடுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான், நம்மாழ்வார் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வரும் ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞர், கடந்த 24 ஆம் தேதியிலிருந்து, சொந்தச் செலவில் வாகனம் தயார் செய்து, அதில் மைக் செட் கட்டி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

'புத்தகங்கள் படியுங்கள்; சமூக வலைதங்களை ஒதுக்குங்கள்!' - கரூர் இளைஞரின் நூதன விழிப்புணர்வு

அதோடு, தண்டோரா போடுபவர்களையும் களத்தில் இறக்கிவிட்டு, 'மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம்' என்று அறிவுறுத்தி வந்தார். ஆனால், அதையும் மீறி மக்கள் பலர் வெளியில் நடமாடுவதை நினைத்து, நம்மிடம் வேதனையுடம் ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

ராஜேஷ் கண்ணன் கொரோனா விழிப்புணர்வு
ராஜேஷ் கண்ணன் கொரோனா விழிப்புணர்வு

இது குறித்து, நம்மிடம் பேசிய இராஜேஷ் கண்ணன், "அதிதீவிரமாக உலகம் முழுக்கப் பரவி வரும் கொரோனா வைரஸை ஒழிக்க இன்னும் மருந்து எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. இதுக்கு ஒரே தீர்வு, நமக்கு வராமல் சமூகத்திலிருந்து நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டு, வீட்டுக்குள் இருப்பதுதான். இதை இந்திய அரசு, தமிழக அரசு, மீடியா, என்னைப்போன்ற சமூக ஆர்வலர்னு பலரும் சொல்லிட்டோம்.

ஆனால், பலரும் அதைக் காது கொடுத்து கேட்பது மாதிரி தெரியலை. கடந்த 24 ஆம் தேதி என்னோட சொந்தச் செலவில் வாகனம் ரெடி பண்ணி மைக் மூலம் நான் பேசியும், தண்டோரா போடுபவர்கள் மூலம் விசயத்தை சொல்லியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். கரூர் பேருந்து நிலையம், கரூர் நகரில் உள்ள 26 மற்றும் 30 வது வார்டு பத்தாயிரம் பேரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். தொடர்ந்து சமூகவலைதளங்கள் மூலமா விழிப்புணர்வு பண்ணிக்கிட்டு வர்றேன்.

ராஜேஷ் கண்ணன்
ராஜேஷ் கண்ணன்

ஆனால், இங்குள்ள மக்கள் பலர் அதைக் காதிலேயே வாங்கிக்கலை. காலை தொடங்கி, நள்ளிரவு வரை வெளியில் வாகனங்களிலும், நடந்தும் பயணிக்கிறாங்க. எங்கே போறாங்கன்னே தெரியலை. இதில் படிச்சவங்க பலருமே, 'எங்களுக்கெல்லாம் கொரோனா வராது'னு சொல்லிவிட்டு, சர்வசாதாரணமாக வெளியில் நடமாடுறாங்க. இது எங்கே போய் முடியும்னு தெரியலை. இந்த வைரஸ் சமூகப் பரவல் வரை போய்டுச்சுன்னா, நிலைமை கையை மீறிப் போய்டும். இவங்க என்னடான்னா, தைரியமா வெளியில் போய், கொரோனா வைரஸை வாங்கிட்டு, பலருக்கும் பரப்பிடு வாங்களோன்னு பயமா இருக்கு" என்று வேதனைப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு