Published:Updated:

கீழடி பண்பாட்டுக் காலம்: கி.மு3-ம் நூற்றாண்டு முதல் கி.பி 12-ம் நூற்றாண்டு வரை! #VikatanInfographics

கீழடியில் கிடைத்துள்ள பொருள்கள் மூலம், தமிழர்களின் பண்பாடு 2,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக உணரப்படுகிறது.

Keezhadi
Keezhadi

நம் முன்னோர்களின் பழைமையைத் தேடிடும் முடிவில்லாத தொடர் பயணமே தொல்லியல் அகழாய்வுகள். மூதாதையர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிறு கற்கருவிகள், சக்கரம், தொல்பொருள்களிலிருந்துதான் நவீன கருவிகள் உருவாகத் தொடங்கியதோடு, மனித வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைந்தது.

`இந்திய வரலாற்றுக்கே வெளிச்சம் பாய்ச்சும்!’ - கீழடி அகழாய்வு முடிவுகளால் நெகிழும் சு. வெங்கடேசன்
Keezhadi
Keezhadi

கண்டறியப்படும் தொல்பொருள்களை முறையாக வகைப்படுத்திப் பொருள்கொள்வதன் மூலம் மனிதனின் பரிணாம வளர்ச்சியைக் கணிக்க முடியும்.

`கீழடி அகழாய்வு முடிவுகள் சொல்லும் உண்மை!' - அடுத்தகட்ட ஆய்வுக்குத் தயாராகும் தமிழக அரசு

மதுரைக்கு வடக்கே சில கற்கால கற்கருவிகளும், 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் ஆவியூர் என்ற ஊரில் பழங்கற்காலக் கருவியும் கண்டெடுக்கப்பட்டன. 1950-களின் பிற்பகுதியில் மதுரை, திருமங்கலம், மேலூர், பெரியகுளம் ஆகிய இடங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பல தொல்லியல் இடங்களையும் தொன்மைச் சின்னங்களையும் கண்டறிந்தனர்.

Keezhadi
Keezhadi

இதைத் தொடர்ந்து, வைகை நதிக் கரையின் இருபுறமும் உள்ள 293 ஊர்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை இந்தியத் தொல்லியல் துறையின் பெங்களூர் அகழாய்வுப் பிரிவு மூன்று கட்டமாக நடத்தியது. தற்போது, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பில் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வு, 2017 முதல் நடத்தப்பட்டுவருகிறது.

முதற்கட்ட ஆய்வுகளின்படி சங்ககாலம் என்பது 2,200 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என்று தரவுகள் கிடைத்தன. நான்காம் கட்ட அகழாய்வில் 5,820 பொருள்கள் வெளிக்கொணரப்பட்டன.

பகடைக்கல், தக்ளி, அரவைக்கல்... கீழடி பொக்கிஷம் காட்டும் தமிழர் தொழில்நுட்பம்! #VikatanPhotoCards
தற்போதைய ஆய்வின்படி, கீழடியில் கிடைத்துள்ள பொருள்கள் மூலம் தமிழர்களின் பண்பாடு 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உணரப்படுகிறது.

இதுவரை எப்போதெல்லாம் அகழாய்வு நடத்தப்பட்டது, இதன்மூலம் என்னென்ன அரும்பொருள்கள் கிடைத்துள்ளன, கிடைத்த பொருள்களின் மூலம் கீழடி பண்பாட்டுக் காலம் எது என்பதைக் கீழே உள்ள இன்ஃபோகிராஃபிக்ஸில் காணலாம்...

Keeladi
Keeladi