Published:Updated:

`சுடுமண்,பாசிகள்,நீர் வழிப்பாதைகள், இன்னும் பல...’ - முடிவுக்கு வரும் கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப்பணி

அருண் சின்னதுரை
ஈ.ஜெ.நந்தகுமார்

கீழடியைச் சுற்றிய சில கிராமங்களில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.

கீழடி
கீழடி ( ஈ.ஜெ.நந்தகுமார் )

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக் களப்பணிகள் செப்டம்பர் கடைசியில் நிறைவு பெறுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வைத் தொடங்கியது.

கீழடி
கீழடி

ஆய்வு மாதிரிகளைக் கரிம வேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவை, கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டன. அதன்பின் அடுத்தடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

சுடுமண், பாசிகள், எலும்புகள், பானைகள், நீர்க்குவளைகள், நீர் வழிப்பாதைகள், தண்ணீர்த்தொட்டிகள் என்று ஏராளமான பொருள்கள் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகளில் கிடைத்தன.

கீழடி
கீழடி

5 -ம் கட்ட அகழாய்வுப் பணியில் பல சமயங்கள் மழைப்பொழிவு ஏற்பட்ட போதும் தொடர்ந்து சிரமமின்றி நடத்தப்பட்டன. இந்த நிலையில், அகழாய்வுப் பணிக்கான குறிப்பிட்ட காலத்தின்படி அகழாய்வு களப்பணி இந்த மாதக் கடைசியில் நிறைவுபெற உள்ளது.

5-ம் கட்ட அகழாய்வுக் களப்பணி முடிந்தாலும் ஆய்வு மையங்களில் நடத்தப்படும் ஆய்வு மற்றும் ஆவணங்கள் சமர்ப்பித்தல் தொடர்பான வேலைகள் நடைபெறும். இந்த 5-ம் கட்ட அகழாய்வுப் பணியானது முழுமையாக நிறைவுபெற்ற பின்னர் கீழடியைச் சுற்றிய சில கிராமங்களில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.

கீழடி அகழாய்வு
கீழடி அகழாய்வு
நந்தகுமார்

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு களப்பணி முடிவுபெற உள்ளதால் ஏராளமான மாணவர்களும் தொல்லியல் ஆர்வலர்களும் கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றுவரும் இடத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.