Published:Updated:

`ஒரே மாதிரியான கலாசாரம்; சங்ககால அடுப்பு..!' -ஆச்சர்யம் கொடுத்த மணலூர் அகழாய்வு

மணலூர் அகழாய்வு
மணலூர் அகழாய்வு

மணலூரில் உள்ள 2 குழிகளை தொல்லியல் ஆய்வாளர்கள் அகழாய்வு செய்யும்போது தொட்டி போன்ற கட்டுமானம் ஒன்று தென்பட்டுள்ளது.

கீழடி 6-ம் கட்ட அகழாய்வின் தொடர்ச்சியாக மணலூரில் உலை அல்லது அடுப்பு போன்ற வடிவம் கொண்ட கட்டுமானம் கிடைத்துள்ளது. மத்திய தொல்லியல்துறை 2-ம் கட்ட அகழாய்வில் இதுபோன்ற கட்டுமானங்களைக் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், 6-ம் கட்ட அகழாய்வுப் பணியைக் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார்.

மழை நீர் கீழடி
மழை நீர் கீழடி

இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், கொரோனா தொற்றால் கீழடி உள்ளிட்ட இடங்களில் முதலில் பார்வையாளர்கள் அனுமதி தடை செய்யப்பட்டது. ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து கீழடியில் பணிகள் முழுமையாக முடங்கின. இந்நிலையில், மீண்டும் அகழாய்வுப் பணி தொடங்கிய சில நாள்களில், கடுமையான மழைப்பொழிவு காரணமாகப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, அகழாய்வுப் பணி நடைபெறும் குழிகளில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, மீண்டும் பணிகள் தொடங்கின.

மணலூர்
மணலூர்

இந்நிலையில், மணலூரில் உள்ள 2 குழிகளை தொல்லியல் ஆய்வாளர்கள் அகழாய்வு செய்யும்போது தொட்டி போன்ற கட்டுமானம் ஒன்று தென்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகத் தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சிவானந்தம் நம்மிடம்,``தற்போது தென்பட்டுள்ள இந்தக் கட்டுமானம் உலை அல்லது அடுப்பு போன்ற வடிவமைப்பாக இருக்கலாம். இரண்டாம் கட்ட அகழாய்வில் இதுபோன்ற கட்டுமானங்கள் நிறைய கிடைத்தன. தற்போது ஆறாம் கட்டத்திலும் அதேபோன்ற வடிவமைப்பு கிடைத்துள்ளது.

மணலூர்
மணலூர்

இதனால் இப்பகுதியில் ஒரே மாதிரியான கலாசாரம் நிலவியுள்ளதை அறிய முடிகிறது. மேலும், சங்ககாலத்தில் இதுபோன்ற பயன்பாடு அம்மக்களிடம் இருந்துள்ளது, என்பதற்குக் கடந்த முறை இங்கு நடைபெற்ற அகழாய்வுகளே சான்று. எனினும் முழுமையாக ஆய்வு செய்ததற்குப் பின்னர்தான் இதுகுறித்து தெரிவிக்க முடியும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு