Published:Updated:

கீழடி 'வியப்பு' - தமிழர் வரலாறும் இரண்டு புதிர் முடிச்சுகளும்!

இந்த வரலாற்று உண்மையை உலகம் அறிவதற்கான ஒரு சிறிய பங்களிப்பைச் செய்கிறது கீழடி அகழாய்வு.

keezhadi
keezhadi

சங்ககாலத்தில் வைகைக்கரையில் நகரப் பண்பாடு நிலவியது என்பதற்கான முதல் அகழாய்வுச் சான்றைக் கீழடி வழங்கியுள்ளது; இந்த அகழாய்வின் மூலம் தமிழர் எழுத்தறிவு தொடர்பான கால நிர்ணயம் கி.மு ஆறாம் நூற்றாண்டிற்கு நகர்ந்திருக்கிறது. சங்க இலக்கியம் வெறும் கற்பனையோ, புனைகதையோ அல்ல... அது அக்கால வாழ்வியல் முறை பற்றிய தெளிவான படப்பிடிப்பு என்பதைக் கீழடி ஆய்வுகள் தெளிவாக்குகின்றன. ஆனால், கீழடி ஆய்வின் முக்கியத்துவத்தைத் தீர்மானிப்பவை இவை மட்டுமல்ல. இந்த அகழாய்வு இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டங்கள் பற்றிய இரண்டு புதிர் முடிச்சுகளின் மீது ஒரே நேரத்தில் ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. புதிர் முடிச்சுகளா? ஆமாம். அவை பற்றித் தெரிந்துகொண்டால் இந்த ஆய்வு முடிவுகள் தரும் வியப்பை நம்மால் முழுமையாக உணர முடியும். சிறப்பு கட்டுரை... விரிவாக படிக்க க்ளிக் செய்க..

keezhadi
keezhadi

சிந்துவெளி நகரப் பண்பாட்டை உருவாக்கிய மக்கள் பேசிய மொழி என்ன? சிந்துவெளிப் பண்பாடு எப்படி நலிவடைந்து சிதைந்தது? அப்பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் என்ன ஆனார்கள்? எங்கே போனார்கள்? இதுதான் வரலாற்று ஆய்வாளர்களுக்குக் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கும் முதல் புதிர்.

சிந்துவெளிப் பண்பாட்டின் 'திராவிடக் கருதுகோள்' எனப்படும் கருத்தியலின் தொடக்கம்.

இந்தியப் பண்பாட்டுப் பரப்பில் தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தையும், மிகத்தொன்மையான இலக்கண இலக்கிய மரபுகளையும் கொண்ட தமிழ்ப்பண்பாட்டுத் தொன்மங்களின் தோற்றப்புள்ளி எது? இது இரண்டாவது புதிர்.

இந்தியாவின் வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டத்தின் தெளிவற்ற தன்மையை மாற்ற இந்த இரு கேள்விகளுக்கும் விடைகாண வேண்டிய தேவை உள்ளது. ஆனால், உண்மையில் இந்த இரு கேள்விகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை; இன்னும் சொல்லப் போனால் இவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இந்த வரலாற்று உண்மையை உலகம் அறிவதற்கான ஒரு சிறிய பங்களிப்பைச் செய்கிறது கீழடி அகழாய்வு.

சிந்துசமவெளிப் பண்பாடு அநேகமாகப் பழந்தமிழ்ப் பண்பாட்டோடு தொடர்புடையதாக இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தை வங்காள மொழியியல் அறிஞர் சுனித் குமார் சட்டர்ஜி 1924இல் வெளியிட்டார். அதுவே, சிந்துவெளிப் பண்பாட்டின் 'திராவிடக் கருதுகோள்' எனப்படும் கருத்தியலின் தொடக்கம்.

keezhadi
keezhadi

அதன் பின்னர், சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட மொழிக்குடும்ப மற்றும் குறிப்பாகப் பழந்தமிழ்த் தொன்மத் தொடர்புகளை வலியுறுத்தும் வகையில் ஹீராஸ் பாதிரியார், அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்திருந்தாலும், சிந்துவெளி நாகரிக மக்கள் பேசிய மொழி பற்றிய ஒருமித்த கருத்து இதுவரை ஏற்படவில்லை. சிந்துவெளி எழுத்துகளை ஐயத்திற்கு இடமின்றி இதுவரை வாசிக்கமுடியவில்லை என்பதே இதற்குக் காரணம்.

- சிந்துவெளியும் சங்கவெளியும் | கீழடிப் பகடை | பானைக் கீறல்கள் | கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்.... ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் எழுதியுள்ள மிக முக்கியமான கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > சிந்து சமவெளி முதல் கீழடி வரை... தடம் பதிக்கும் தமிழர் வரலாறு https://www.vikatan.com/news/general-news/sindhu-samaveli-and-keezhadi-excavation-history

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |