Published:Updated:

`ஊரடங்கு... கடும் மழை!' - சிக்கல்களைத் தாண்டி மீண்டும் தொடங்கிய கீழடி அகழாய்வு

6- கட்ட அகழாய்வுப் பணி
6- கட்ட அகழாய்வுப் பணி

கொரோனா தொற்றால் கீழடி உள்ளிட்ட இடங்களில் முதலில் பார்வையாளர்கள் அனுமதி தடை செய்யப்பட்டது. ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து கீழடியில் பணிகள் முழுமையாக முடங்கின.

கனமழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கீழடி அகழாய்வுப் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், 6-ம் கட்ட அகழாய்வுப் பணியை கடந்த பிப்ரவரி 19-ம் தேதி காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.

மழை நீர் கீழடி
மழை நீர் கீழடி

இந்நிலையில், கொரோனா தொற்றால் கீழடி உள்ளிட்ட இடங்களில் முதலில் பார்வையாளர்கள் அனுமதி தடை செய்யப்பட்டது. ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து கீழடியில் பணிகள் முழுமையாக முடங்கின.

இந்நிலையில், மீண்டும் அகழாய்வுப் பணி தொடங்கிய சில நாள்களில், கடுமையான மழைப்பொழிவு காரணமாகப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அகழாய்வுப் பணி நடைபெறும் குழிகளில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, இன்று மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன.

அகழாய்வுப் பணி
அகழாய்வுப் பணி

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகையில்," 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இதுவரை 4 முதுமக்கள் தாழிகள், செங்கல் கட்டுமானம், நீர்வழிப்பாதை, மண் பானைகள், பாசி மணிகள், பொருள்களைச் சேமித்துவைக்கும் 5 கொள்கலன்கள் உள்ளிட்ட தொன்மையான பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தொடர்ந்து பணிகளில் சுணக்கம் இல்லாமல் இருந்தால்தான் 6-ம் கட்ட அகழாய்வுப் பணி முழுமைபெறும். ஆனால், நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அகழாய்வுப் பணி தாமதமாகிறது. எனவே, கடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிக்கு கூடுதல் அவகாசம் கொடுத்தது போல, தற்போது நடைபெறும் அகழாய்வுக்கும் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்.

தேங்கிய மழை நீர்
தேங்கிய மழை நீர்

எனவே, அகழாய்வுப் பணியில் தொடர்ந்து அரசு ஆர்வம் காட்ட வேண்டும்" என கோரிக்கை வைத்தனர்.

உறைகிணறு, சூதுபவளம், நீர் மேலாண்மை... தமிழர் தொன்மை சொல்லும் கீழடி பொக்கிஷங்கள்! (படங்கள்)
அடுத்த கட்டுரைக்கு