Published:Updated:

கீழடி: `5,820 தொல்பொருள்கள்!’ - அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

கீழடியில் அமைய உள்ள அருங்காட்சியகத்துக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார்.

`கீழடி என்ற ஒற்றைச் சொல் தமிழர்களிடம் ஆழமாகப் பதிந்துள்ளது. 5-ம் கட்ட அகழாய்வின் தொடக்கம் முதலே அதிகளவு பேசப்பட்டு வருகிறது. உலகத் தமிழர்களால் கீழடி கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளதால் தமிழக அரசு இதற்குக் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்டு மதுரை அருகே அமைந்துள்ள கீழடி அகழாய்வுப் பணி முதல் மூன்று கட்டம் இந்திய தொல்லியல்துறை மூலமாக நடைபெற்று வந்த நிலையில் 4, 5 மற்றும் 6-ம் கட்ட அகழாய்வுகள் தமிழக தொல்லியல்துறையால் நடத்தப்பட்டு வருகிறது.

கீழடி
கீழடி

6-ம் கட்ட அகழாய்வில் கீழடி மட்டுமல்லாம் கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அகழாய்வு நடைபெறுவது சிறப்பு. இந்நிலையில் ஏற்கெனவே தமிழக அரசு கீழடியில் உலகத்தரம் வாய்ந்த கள அருங்காட்சியகம் ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது.

இதற்கிடையே கீழடியில் நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருள்களைக் கொண்டு மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில் இந்த அருங்காட்சியகம் கீழடி அரசு மேல்நிலைப் பள்ளி கூடுதல் கட்டடம் அருகில் அமைப்பது என்று முடிவாகி, அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது.

கீழடி அகழ்வாராய்ச்சி
கீழடி அகழ்வாராய்ச்சி

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலமாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தொல்லியல்துறை ஆணையர் உதயச்சந்திரன், சென்னையிலும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், தமிழகத் தொல்லியல்துறையின் இணை இயக்குநர் சிவானந்தம், கீழடி ஊராட்சி மன்றத் தலைவர், கொந்தகை ஊராட்சி மன்றத் தலைவர் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அருங்காட்சியகப் பணிகள் ஒரு வருடத்துக்குள் முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.``வைகைக்கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.

காணொலிக் காட்சி
காணொலிக் காட்சி

மேலும் கட்டுமானப் பொருள்கள் - செங்கல் கட்டுமானம், சுடுமண்ணாலான உறை கிணறுகள் தங்கத்தால் ஆன சில ஆபரணப் பாகங்கள், செம்பிலான தொல்பொருள்கள், இரும்புக் கருவிகள், சுடுமண்ணாலான விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்ட 5,820 தொல்பொருள்கள் வெளிக் கொணரப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் பழைமையான கீழடி பொருள்கள் அமைவது பெருமையான ஒன்றாக இருக்கும்” எனத் தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு