Published:Updated:

நீட் தேர்வு: `கடைசி நிமிடம்; போட்டோ இல்லாமால் தவித்த மாணவி; காவலரின் உதவியால் நெகிழ்ந்த மக்கள்!'

காவலர்

போக்குவரத்துப் பணிக்காக அந்தத் தேர்வு மையத்திற்கு வந்த காவலர் ஜான் பிரிட்டோ மாணவர்கள் அனைவரும் முழுமையாகத் தேர்வு மையத்திற்குள் செல்லும் வரையிலும் உடனிருந்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வழிகாட்டினார்.

நீட் தேர்வு: `கடைசி நிமிடம்; போட்டோ இல்லாமால் தவித்த மாணவி; காவலரின் உதவியால் நெகிழ்ந்த மக்கள்!'

போக்குவரத்துப் பணிக்காக அந்தத் தேர்வு மையத்திற்கு வந்த காவலர் ஜான் பிரிட்டோ மாணவர்கள் அனைவரும் முழுமையாகத் தேர்வு மையத்திற்குள் செல்லும் வரையிலும் உடனிருந்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வழிகாட்டினார்.

Published:Updated:
காவலர்

ஞாயிற்றுக்கிழமை என்றபோதிலும், இன்றைய தினம் ஒட்டு மொத்த தேசமும் நீட் தேர்வு என்ற ஒற்றைச் சொல்லால் பரபரத்துக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் MBBS, BDS, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் தேசிய தேர்வு முகமை நடத்தும் NEET தேர்வை தற்போது எதிர்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் 13 மொழிகளில் நீட் தேர்வுக்கு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்குத் தமிழகத்தில் மொத்தம் 1,10,971 பேர் விண்ணப்பித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை இந்த வருடம் 155-லிருந்து 198-ஆக தேர்வு முகமையால் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தலைநகர் சென்னையில் மட்டும் 33 மையங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. இன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை எனத் தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், மாணவர்கள் மதியம் 1.30 மணி வரை தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

பல்வேறு தேர்வு மையங்களில் மாணவர்கள் அடையாள அட்டை, நுழைவு சீட்டு மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அவசரத்தில் எடுத்துவர மறந்து விட்டு, பதற்றத்துடன் காணப்பட்டனர். அவர்களுக்குப் பொதுமக்கள் பலரும் முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர். சென்னை கீழ்பாக்கம் பகுதியில் நீட் தேர்வு மையம் ஒன்றின் முன்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தப் போக்குவரத்து காவலர் ஒருவர் நீட் தேர்வு குறித்த படபடப்பில் செய்வதறியாது திகைத்து நின்ற மாணவர்களுக்கு ஊக்கமளித்து தேவையான உதவிகளைச் செய்து தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைத்தது அங்கிருந்தவர்களின் மனதை நெகிழச் செய்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு மையத்தின் வெளியில் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோ ஈடுபடுத்தப்பட்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கீழ்பாக்கத்தின் சாலைகள் வெறிச்சோடி காணப்படவே, நீட் தேர்வை எதிர்கொள்ளப்போகும் மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக ஜான் பிரிட்டோ மாணவர்கள் கூட்டத்திற்கு அருகில் சென்றிருக்கிறார். மதியம் 2 மணிக்குத் தேர்வு தொடங்கவிருக்கும் நிலையில், மாணவர்கள் பலரும் பதற்றத்துடன் இருந்ததைக் கண்டு வருத்தமடைந்த அவர் மாணவர்கள் அருகில் சென்று மெல்லப் பேச்சுக் கொடுத்தார். நீட் தேர்வை முதல் முறையாக எதிர்கொள்ளும் மாணவர்கள் அநேகம் பேர் தேர்வு மையத்திற்கு எதை எடுத்துச் செல்ல வேண்டும்..?, என்ன செய்ய வேண்டும்..? என்று தெரியாமல் காவலர் ஜான் பிரிட்டோவிடம் கேட்க, அவர் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி அவர்களை வழிகாட்டத் தொடங்கினார். தேர்வு அவசரத்தில் தண்ணீர் பாட்டில் எடுத்து வராத மாணவர்களுக்கு ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்து தந்தார். அதே போல், ஆதார், ஹால் டிக்கெட், புகைப்படங்கள் ஆகியவை வரிசையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் அனைவரிடமும் இருக்கிறதா என்பதை மிகவும் பொறுமையாக விசாரித்து இல்லாதவர்களுக்குச் செய்ய வேண்டியதை விளக்கி அவர்களின் பதற்றத்தைத் தணித்தார்.

கீழ்பாக்கம் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோ
கீழ்பாக்கம் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோ

மதியம் 1.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அந்தத் தேர்வு மையத்தில் மாணவி ஒருவர் தனது பாஸ்போர்ட் சைஸ் எடுத்து வர மறந்து விட்டுச் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தார். படபடப்புடன் காணப்பட்ட அந்த மாணவியை அணுகிய காவலர் ஜான் பிரிட்டோ, `என்னம்மா என்னாச்சு சொல்லுங்க.. என்ன பிரச்னை.. எல்லாம் சரியா இருக்கா?' என்று கேட்க, அந்த மாணவி பாஸ்போர்ட் சைஸ் போட்டேடோ இல்லையென்று முகம் வியர்க்கக் கூறியுள்ளார். நேரம் பிற்பகல்1.30 மணியை நெருங்கிக் கொண்டிருக்கையில் துரிதமாகச் செயல்பட்ட காவலர் பிரிட்டோ உடனடியாக அந்த மாணவியை ஏற்றிக் கொண்டு போட்டோ ஸ்டூடியோக்களைத் தேடி தனது வாகனத்தைச் செலுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் கீழ்பாக்கம் பகுதியில் பெரும்பாலான போட்டோ ஸ்டூடியோக்கள் மூடப்பட்டிருந்தது. அதனால், சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஒரு கடையில் அந்த மாணவி வைத்திருந்த புகைப்படத்தை வைத்தே பாஸ்போர்ட் சைஸில் புகைப்படத்தைத் தயார் செய்து கொடுத்தார். பின்னர், அந்த மாணவியை தைரியப்படுத்தி சரியாக 1.30 மணிக்கு சில நிமிடங்கள் முன்பாகவே தேர்வு மையத்துக்குள் அனுப்பி வைத்தார். காவலர் ஜான் பிரிட்டோவின் இந்த செயலைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அவரை வாழ்த்தினர். போக்குவரத்து பணிக்காக அந்தத் தேர்வு மையத்திற்கு வந்த ஜான் பிரிட்டோ மாணவர்கள் அனைவரும் முழுமையாகத் தேர்வு மையத்திற்குள் செல்லும் வரையிலும் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வழிநடத்திக் கொண்டிருந்தார்.

புகைப்படத்தை எடுத்து வர மறந்த மாணவி
புகைப்படத்தை எடுத்து வர மறந்த மாணவி

கீழ்பாக்கம் நீட் தேர்வு மையத்தில் மாணவர்களுக்குச் சிறப்பாக வழிகாட்டி உதவிய போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோவிடம் பேசினோம், "ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அதனால், தேர்வு மையம் பக்கம் சென்றேன். அங்கு மாணவர்கள் அனைவரது முகத்திலும் அப்படி ஒரு பதற்றம் காணப்பட்டது. என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்தபடி நின்று கொண்டிருந்தனர். அங்கிருந்த மாணவர்களில் பெரும்பாலானோர் உடன் யாருமின்றி தனியாகவே வந்திருந்தனர். பதற்றமாக இருந்த மாணவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் வாங்கி வந்து கொடுத்தேன். வரிசையிலிருந்த அனைவரிடமும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று விசாரித்துக்கொண்டே சென்றேன். அப்போது தான் மாணவி ஒருவர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இல்லாமல் உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று விசாரித்தேன்.

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் அம்மா இருக்கிறார்கள். நான் மட்டும்தான் வந்திருக்கிறேன். அவசரத்தில் புகைப்படம் எடுத்துவர மறந்து விட்டேன். வீடு வெகு தூரம் என்று என்னிடம் கூறி வருத்தப்பட்டார். நான் உடனடியாக அவரை அழைத்துக் கொண்டு ஸ்டூடியோ ஒன்றில் அவருக்குப் புகைப்படம் ஏற்பாடு செய்து, அவரை தேர்வு மையத்திற்குள் சரியான நேரத்தில் அனுப்பி வைத்தேன். தினமும் வாகன ஓட்டிகளின் ஆவணங்களைச் சரி பார்க்கும் நான் இன்று சிறிது நேரம் மாணவர்களின் படிப்பிற்கான ஆவணங்களைச் சரி பார்த்து அவர்களுக்கு வழிகாட்டியது மன நிறைவாக இருக்கிறது" என்று சிறு புன்னகையுடன் கூறினார்.

காவலர்
காவலர்

காவலர் ஜான் பிரிட்டோவின் வழிகாட்டுதலால் கீழ்பாக்கம் நீட் தேர்வு மையத்தில் ஏராளமான மாணவர்கள் கடைசி நேர அலைக்கழிப்பைத் தவிர்த்து விட்டு, தற்போது மருத்துவர்களாகும் பெருங் கனவுடன் நீட் தேர்வை எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism