Published:Updated:

கரிகால் சோழனுக்கு ஆண்டுதோறும் அரசு விழா... டெல்டா மக்கள் கோரிக்கை!

கரிகால் சோழன்

கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனுக்கும், இதை மறுசீரமைப்பு செய்த ஆங்கிலேய அரசின் பொறியாளரான ஆர்தர் காட்டனுக்கும் நன்றி கூறும் விதமாகவே இதனைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

கரிகால் சோழனுக்கு ஆண்டுதோறும் அரசு விழா... டெல்டா மக்கள் கோரிக்கை!

கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனுக்கும், இதை மறுசீரமைப்பு செய்த ஆங்கிலேய அரசின் பொறியாளரான ஆர்தர் காட்டனுக்கும் நன்றி கூறும் விதமாகவே இதனைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

Published:Updated:
கரிகால் சோழன்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் கரிகால் சோழன் கட்டிய கல்லணையால், காவிரி டெல்டா விவசாயிகள் இன்றளவும் பயன் அடைந்து வருகிறார்கள். இதனை போற்றும் விதமாக, ஆண்டுதோறும் தை பொங்கல் திருவிழாவின் போது மாமன்னன் கரிகால் சோழனுக்கு தமிழக அரசு வெகு விமர்சையாக விழா நடத்த வேண்டும் என டெல்டா மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இயற்கையையும் கால்நடைகளையும் போற்றி நன்றி தெரிவிக்கும் விதமாகவே பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, உணவளிக்கும் வேளாண்மையின் முக்கியத்துவத்தை உலகுக்குப் பறைசாற்றும் விதமாகவே பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் இதனைக் கொண்டாடி வருகிறார்கள். உலகில் வேறு எங்கும் இந்த அளவிற்கு உழவுத் தொழிலையும் கால்நடைகளையும் கொண்டாடக்கூடிய விழா நடைபெறுவதில்லை. இந்நிலையில்தான், காவிரி டெல்டாவிற்குப் பாசனம் அளிக்கும் கல்லணையில் இந்த ஆண்டு, காவிரி உரிமை மீட்புக்குழுவின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இயற்கையையும் கால்நடைகளையும் மட்டும் போற்றினால் போதுமா... தமிழ்நாட்டின் விவசாயம் உயிர்ப்புடன் இருக்க, பெரும் அர்ப்பணிப்புடன் பங்களிப்புசெய்த மனிதர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் இதனைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

கரிகாலன் சோழன்
கரிகாலன் சோழன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனுக்கும், இதை மறுசீரமைப்பு செய்த ஆங்கிலேய அரசின் பொறியாளரான ஆர்தர் காட்டனுக்கும் நன்றி கூறும் விதமாகவே இதனைக் கொண்டாடியிருக்கிறார்கள். இவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ‘’காவிரிப் படுகை இன்றைக்கு வளமாகச் செழித்திருக்கிறது. இதற்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்தவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லணையைக் கட்டிய கரிகால் பெருவளத்தான். ஆங்கிலேயப் பொறியாளரான ஆர்தர் காட்டன் இதை மறுசீரமைப்பு செய்ததோடு மட்டுமல்லாமல், மேலணையான முக்கொம்பு அணையையும், கீழணையான கொள்ளிடம் அணையையும் கட்டி அர்ப்பணித்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொங்கல் விழா நேரத்தில் இவர்களைப் போற்றுவது தமிழர்களின் தலையாய கடமை. இதனால்தான் ஆண்டுதோறும் கரிகால் சோழனின் சிலைக்கும், ஆர்தர் காட்டனின் சிலைக்கும் மாலை சூடி, பொங்கல் படையலிட்டு, இவர்களது அர்ப்பணிப்பு பற்றி நன்றியுடன் நினைவுகூர்ந்து வருகிறோம்.

காவிரித்தாய்க்கும் படையலிட்டு மரியாதை செய்தோம். காவிரி உரிமை மீட்புக்குழுவில் இடம்பெற்றுள்ள விவசாயிகள் சங்கத்தினர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் மட்டுமே இதில் பங்கு கொண்டு வருகிறார்கள். தமிழகத்தின் பெரும்பாலான மக்கள், கரிகால் சோழனை போற்றி நினைவுகூர, ஆண்டுதோறும் தை 2-ம் நாள் உழவர் தினத்தன்று, தமிழக அரசு கரிகால் சோழனுக்கு விழா நடத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

மேலும் பேசிய பெ.மணியரசன், "மக்களின் வாழ்வாதாரத்திற்காக, கரிகால் பெருவளத்தான் மகத்தான பங்களிப்பை செய்திருக்கிறார். ஆனால் தற்போதைய தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் தமிழக மக்களின் காவிரி உரிமை படிபடியாக கைவிட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசின் அனுமதி கிடைத்துவிட்டதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். அங்கு அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட கிடைக்காது. இதனைத் தடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்காதது வருத்தம் அளிக்கிறது. கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியினர் 20 ஆயிரம் பேரைத் திரட்டிக் கொண்டு, மேக்கேதாட்டுவில் அணை கட்ட கோரி பேரணி செல்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி அதற்கு கண்டனம் கூட தெரிவிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism