Election bannerElection banner
Published:Updated:

சேலம்: மனித மனங்களை மாற்றும் போதி சுவர்களை உருவாக்கியவர்... பசுபதிநாதன் வாழ்வும் மறைவும்!

பொன்மொழி எழுதும் பசுபதிநாதன்
பொன்மொழி எழுதும் பசுபதிநாதன் ( எம். விஜயகுமார் )

விளம்பர சுவர்களை விழிப்புணர்வு சுவர்களாக்கிய மாமனிதர் பசுபதிநாதன்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமையில் சேலம் மாநகராட்சியில் உள்ள பல சுவர்களில் பொன்மொழிகளை எழுதுவார். அதை நான் தவறாமல் படித்து விடுவேன். ஒவ்வொரு பொன்மொழிகளும் நச்... நச்சென்று இருக்கும். இவருடைய பொன்மொழிகளைப் படித்து உத்வேகம் அடைந்ததாக இயக்குநர் சசிகுமார் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
பசுபதிநாதன்
பசுபதிநாதன்

முகமூடி கிழியும் வரை

அனைவரும்

நல்லவர்களே!

சேலம் மாநகராட்சியில் கடந்த 27 வருடங்களுக்கு மேலாக மூலை முடுக்கெல்லாம் எம்.எம்.எம். கார்னர் என்ற பெயரில் ஒவ்வொரு வாரமும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அழகிய பொன்மொழிகள் எழுதி வந்தவர் பசுபதிநாதன். இவருடைய பொன்மொழிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. காலப்போக்கில் இவர் சேலத்தின் அடையாளமாகத் திகழ்ந்தார். இந்நிலையில் பசுபதிநாதன் கடந்த வாரம் திடீரென மரணம் அடைந்தார். இவருடைய மரணம் சேலம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பசுபதிநாதன். இவர் பத்தாம் வகுப்புவரை தான் படித்திருக்கிறார். திரைப்படங்களுக்குச் சுவர் விளம்பரம் மற்றும் விளம்பர பேனர்கள் எழுதி அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்தார். இவருடைய மனைவி அலமேலு, இவர்களுக்கு ஹேமலதா, ஶ்ரீதர் பிரபு என ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். பசுபதிநாதன் சிறந்த சிந்தனையாளர், கற்பனை வளம் மிக்கவர், ஓவியர், எழுத்தாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.

பொன்மொழி
பொன்மொழி

சினிமா விளம்பரங்களை எழுதி வாழ்க்கை நடத்திவந்தவர், ஒரு கட்டத்தில் தன்னுடைய விளம்பரம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமென முடிவெடுத்தார். அதனால் தன் சிந்தனையில் உதித்த முத்தான பொன்மொழிகளைச் சொந்த செலவில் சுவர்களில் எழுதிவந்தார். இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததோடு ரசிகர்களாகவும் மாற்றியது. இந்நிலையில் கடந்த வாரம் வீட்டின் தரையில் தண்ணீர் இருப்பது தெரியாமல் கால் வழுக்கி விழுந்து பின் மண்டையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி நுகர்வோர் உரிமைகள் இயக்கத்தின் நிறுவனர் பூபதி, ''அய்யாவின் பொன்மொழிகளுக்கு நான் அடிமை. அவர் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமையில் சேலம் மாநகராட்சியில் உள்ள பல சுவர்களில் பொன்மொழிகளை எழுதுவார். அதை நான் தவறாமல் படித்து விடுவேன். ஒவ்வொரு பொன்மொழிகளும் நச்... நச்சென்று இருக்கும். இவருடைய பொன்மொழிகளைப் படித்து உத்வேகம் அடைந்ததாக இயக்குநர் சசிகுமார் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இவருடைய பொன்மொழிகளைப் படித்து பலர் மனமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.

பூபதி
பூபதி

இவரின் பொன்மொழிகளைத் தாங்கிய சுவர்கள் போதி சுவர்களாகத் திகழ்ந்தன. குட்டிச் சுவர்களாக இருந்தவை இவர் வருகைக்குப் பிறகு மனித மனங்களைக் கட்டுப்படுத்தும் மதில் சுவர்களாக மாறியது. தேர்தல் நேரத்தில் சுவர்களில் விளம்பரம் எழுதக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் தடை விதித்த போதும் கலெக்டரின் சிறப்பு அனுமதி பெற்று பொன்மொழிகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். இவருடைய இழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய மறைவால் பொன்மொழிகளைத் தாங்கி நிற்கும் சுவர்களும் மக்களின் கவனத்திலிருந்து மறைந்து போகும்" என்றார் வருத்தத்தோடு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு