Published:Updated:

கொடநாடு வழக்கு: கேரளாவிலிருந்து வந்து ஆஜரான சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி! - வேகம் பெறும் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8, 9-வது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி இருவரிடமும் நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத் முன்னிலையில் ஊட்டியில் விசாரணை நடைபெற்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் 23 -ம் தேதி கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று, பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரைக் கொலை செய்துவிட்டு, சில பொருள்களைத் திருடிச் சென்றது. அடுத்தடுத்த பரபரப்பு திருப்பங்களுடன் ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இந்த கொடநாடு வழக்கின் கூடுதல் விசாரணை, கடந்த மாதம் 17-ம் தேதி சயானிடம் தொடங்கியது.

கொடநாடு ரகசிய வாக்குமூலம்
கொடநாடு ரகசிய வாக்குமூலம்

ஒரு மாதத்துக்கும் மேலாக, பரபரப்புடன் நடைபெற்றுவரும் இந்தப் புலன்விசாரணையில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ் முதல் தற்கொலை செய்துகொண்ட கொடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமாரின் உறவினர்கள் வரை 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

இந்தப் புலன்விசாரணையின் அடுத்தகட்ட நகர்வாக குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் ரகசிய வாக்குமூலங்களை பெறுவதில் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்த வழக்கில் 8, 9-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி இருவரையும் கேரளாவிலிருந்து ஊட்டிக்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றுவருகின்றனர்.

கொடநாடு ரகசிய வாக்குமூலம்
கொடநாடு ரகசிய வாக்குமூலம்

இந்த வாக்குமூலம் குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ``கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் புலன்விசாரணையில் அதிகமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தியிருக்கிறோம். ஆனால் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருப்பவர்களைப் பொறுத்தவரை முதல் நபரான சயான், ஜம்ஷீர் அலி இருவரிடம் மட்டுமே வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 8, 9-வது நபர்களான சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றுவருகிறோம். குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களிடமும் வாக்குமூலத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு