Published:Updated:

`கறியாகறதுக்குள்ள கண்டு புடிச்சாகணும்! - மானைத் தேடி அலையும் கொள்ளிடம் வனத்துறையினர்

கொள்ளிடம்

சில ஊர்க்காரர்களும் ரகசியமாக மானைத் தேடுவதாகவும் தகவல். நல்ல நோக்கத்தோடு, தொடர்ந்து மானைத்தேடும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வனத்துறையினரிடம் மான் சிக்க வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை.

`கறியாகறதுக்குள்ள கண்டு புடிச்சாகணும்! - மானைத் தேடி அலையும் கொள்ளிடம் வனத்துறையினர்

சில ஊர்க்காரர்களும் ரகசியமாக மானைத் தேடுவதாகவும் தகவல். நல்ல நோக்கத்தோடு, தொடர்ந்து மானைத்தேடும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வனத்துறையினரிடம் மான் சிக்க வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை.

Published:Updated:
கொள்ளிடம்

கொள்ளிடம் பகுதியில் மான் ஒன்று ஓடியதாகத் தகவலறிந்த வனத்துறையினர் அதைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Deer - Representational Image
Deer - Representational Image
Pixabay

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள மாதானம் வயல் பகுதியில் நேற்று ஒரு மான் ஓடியதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள் கொள்ளிடம் அருகேயுள்ள மாதானம், பச்சைபெருமாநல்லூர், அழகியநத்தம், திருநீலகண்டம், உமையாள்பதி, பழையபாளையம் மற்றும் கடலோரப் பகுதிகளில் தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மானைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மானைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை முதல் மாலை வரை வனத்துறையினர் தேடியும் மானை கண்டறிய முடியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொள்ளிடம் அருகேயுள்ள சரஸ்வதிவளாகம், கொன்னகாட்டுபடுகை, கீரங்குடி, மாதிரவேளூர், பாலூரான்படுகை, பட்டியமேடு உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான காட்டுப் பகுதிகள் நிறைய உள்ளன.

கொள்ளிடம்
கொள்ளிடம்

அந்த இடங்களில் சில மான்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருசிலர் மட்டும் அப்பகுதியில் மான்களைப் பார்த்ததாகத் தெரிவிக்கின்றனர். `அப்பகுதியில் இருந்து வந்த மானாக இந்த மான் இருக்கலாமோ?' என்றும் வனத்துறையினர் சந்தேகத்தில் உள்ளனர். வனத்துறையினரின் கவலையெல்லாம் கொரோனா ஊரடங்கில் முடங்கிக் கிடப்பவர்களின் கைகளில் மான் சிக்கி, அதைச் சமைத்து விருந்தாக்கி உண்பதற்கு முன் மானை பிடித்துவிட வேண்டும் என்பதுதான். சில ஊர்க்காரர்களும் ரகசியமாக மானைத் தேடுவதாகவும் தகவல். நல்ல நோக்கத்தோடு, தொடர்ந்து மானைத்தேடும் முயற்சியில்  ஈடுபட்டு வரும் வனத்துறையினரிடம் மான் சிக்க வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை.