Published:Updated:

``எப்பவும் சந்தோஷமா இருப்பேன்; அதான் ரகசியம்!" - 100-வது பிறந்தநாள் கொண்டாடிய பாட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிறந்தநாள் கொண்டாடிய பாட்டி
பிறந்தநாள் கொண்டாடிய பாட்டி

``பாட்டியை இதுவரை எந்த நோயும் எட்டிக்கூடப் பார்த்ததில்ல. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்னு எந்தப் பிரச்னையும் இல்ல. கொரோனா காலத்துலகூட தெம்பா இருந்தாங்க. கண் பார்வை நல்லாவே இருக்கு, இதுவரை கண்ணாடி போட்டதில்லை." - உறவினர்கள்.

கொள்ளிடம் அருகே தற்காஸ் கிராமத்தில் பாட்டிக்கு நடைபெற்ற 100-வது பிறந்தநாள் விழாவில் கிராமமே கலந்துகொண்டு கொண்டாடி ஆசிர்வாதம் பெற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தற்காஸ் கிராமம் உத்ராபதிகோயில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரின் மனைவி கோவிந்த கமலத்தம்மாள். கோவிந்தராசு 1994-ம் ஆண்டு இயற்கை எய்தினார். கோவிந்த கமலத்தம்மாள் குடும்பத்தில் மூன்று மகன்கள், இரண்டு மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன் பேத்திகள், கொள்ளுப்பேரன், பேத்திகள், எள்ளுப்பேரன், பேத்திகள் வாரிசுகளின் இணைகள் என 50 பேர் உள்ளனர். கோவிந்த கமலத்தம்மாளுக்கு நேற்று 100-வது வயது தொடங்குவதையொட்டி குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சார்பில் 100-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி இனிப்பு வழங்கி, விருந்து உபசரிப்பு செய்து விழாவைக் கொண்டாடினர். 

பிறந்தநாள் கொண்டாடிய பாட்டி
பிறந்தநாள் கொண்டாடிய பாட்டி
107 வயதைத் தொட்ட ஜப்பான் இரட்டை சகோதரிகள்; அதிக ஆண்டுகள் வாழ்ந்தவர்களில் கின்னஸ் சாதனை!

``பாட்டியை இதுவரை எந்த நோயும் எட்டிக்கூடப் பார்த்ததில்ல. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்னு எந்தப் பிரச்னையும் இல்ல. கொரோனா காலத்துலகூட தெம்பா இருந்தாங்க. கண் பார்வை நல்லாவே இருக்கு, இதுவரை கண்ணாடி போட்டதில்லை. இதுவரை மருத்துவமனைக்குப் போனதுமில்லை; எந்த மருந்தும் சாப்பிட்டதும் இல்லை. இப்போ வரை திடகாத்திரமா, சந்தோஷமா இருக்காங்க. சைவம், அசைவம்னு எந்த உணவு சாப்பிட்டாலும் எளிதில் ஜீரணம் ஆகிடும்'' என்று சொல்லி வியக்க வைத்தார்கள் பாட்டியின் உறவினர்கள்.

``எப்படி பாட்டி இப்படி அசத்துறீங்க..?" என்று கோவிந்த கமலத்தம்மாளிடம் பேசினோம்.

``ஆரம்பகாலம் முதலே கடுமையான உழைப்பாளி நான். அதுதான் நான் 100 வருஷம் வாழக் காரணம்னு நெனைக்கிறேன். எனக்கு வேண்டிய உணவை நானே சமைச்சுக்கிறேன். முன்னயெல்லாம் கம்பு, கேழ்வரகுனு தானியங்கள்தான் என்னோட பிரதான உணவா இருந்தது. காலப்போக்குல இட்லி, சோறுனு உங்க சாப்பாட்டுக்குப் பழகிட்டேன்.

பிறந்தநாள் கொண்டாடிய பாட்டி
பிறந்தநாள் கொண்டாடிய பாட்டி
`எப்பவும் என்னை சந்திச்சு பிரச்னைகளைச் சொல்லலாம்!' - 90 வயது பஞ்சாயத்து தலைவர் பெருமாத்தாள்

நான் மனசளவுலகூட யார் மேலயும் கோபப்பட மாட்டேன். எப்பவும் சந்தோஷமா இருப்பேன். இதுதான் என் ஆரோக்கியத்தோட ரகசியம்'' என்று சிரிக்கிறார் பாட்டி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு