Published:Updated:

நீலகிரி: கொட்டித்தீர்த்த மழை; தரைப்பாலத்தில் அடைப்பு; வெள்ளக்காடான கிராமம் - பெண் உயிரிழந்த சோகம்!

மழை - வெள்ளக்காடான கிராமம்

திடீரென கொட்டித்தீர்த்த மழையில் எல்லாப் பக்கங்களிலும் மழை சூழ்ந்துவிட்டது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆலம்மாவை இரவு முழுவதும் தேடினோம். காலையில்தான் சடலத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது.

நீலகிரி: கொட்டித்தீர்த்த மழை; தரைப்பாலத்தில் அடைப்பு; வெள்ளக்காடான கிராமம் - பெண் உயிரிழந்த சோகம்!

திடீரென கொட்டித்தீர்த்த மழையில் எல்லாப் பக்கங்களிலும் மழை சூழ்ந்துவிட்டது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆலம்மாவை இரவு முழுவதும் தேடினோம். காலையில்தான் சடலத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது.

Published:Updated:
மழை - வெள்ளக்காடான கிராமம்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கூக்கல்தொரை, மசக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை சுமார் இரண்டு மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையால் அந்தப் பகுதியே வெள்ளக்காடாக மாறியது. ஓடைகளில் பெருக்கெடுத்த வெள்ளநீர் சாலைகள், குடியிருப்புகள், கடைகளுக்குள் சூழ்ந்தது. இந்த நிலையில் மழையின்போது ஓடையைக் கடக்க முயன்ற ஆலம்மாள் என்ற பெண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வெள்ளக்காடான கிராமம்
வெள்ளக்காடான கிராமம்

விளைநிலங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்ததால், பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறிப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் சாலையோரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வானங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. குறைந்த நேரத்தில் அளவுக்கு அதிகமாக மழை பெய்ததும், நீரோடைகள் முறையாகப் பராமரிக்கப்படாததுமே இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படக் காரணம் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மழை பாதிப்புகள் குறித்து கிராம மக்கள் பேசுகையில், "இந்தப் பகுதியில் இருக்கும் ஓடையும் தரைப்பாலமும் முறையாகத் தூர்வாரி பராமரிக்கப்படுவதில்லை. கொஞ்சம் மழை பெய்தாலே தரைப்பலாலத்தில் அடைப்பு ஏற்படுகிறது. நேற்று பெருமழை பெய்தது.

வெள்ளக்காடான கிராமம்
வெள்ளக்காடான கிராமம்

திடீரென கொட்டித்தீர்த்த மழையில் எல்லாப் பக்கங்களிலும் மழை சூழ்ந்துவிட்டது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆலம்மாவை இரவு முழுவதும் தேடினோம். காலையில்தான் சடலத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. விவசாயிகளுக்கும் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இனி இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க அரசாங்கம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர் வேதனையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism