Published:Updated:

மெகா தடுப்பூசி முகாம்: `தங்கக்காசு, ஹெட்போன், சேலை பரிசாக வழங்கப்படும்!'- மக்களை ஈர்க்க புது முயற்சி

கோவில்பட்டி நகராட்சி அலுவலகம்
கோவில்பட்டி நகராட்சி அலுவலகம்

நாளை நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமில் கோவில்பட்டி நகராட்சிப் பகுதியில் தடுப்பூசி போடும் 100 பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுவதாகவும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் அறிவித்திருந்தார். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த முகாம்கள் செயல்படும் எனவும், 20 லட்சம் பேருக்குத் தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியிருந்தார்.

தடுப்பூசி
தடுப்பூசி
`மொத்த உழைப்பும் வீணாகிடுமே?!' - மெகா தடுப்பூசி முகாமுக்கு எதிராக சில குரல்கள்; அரசு பரிசீலிக்குமா?

இந்த நிலையில், தடுப்பூசி போடுவதன் அவசியத்தையும், பாதுகாப்பையும் வலியுறுத்தி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாளை நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமில் மக்கள் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், பொது மக்களைத் தடுப்பூசி போட ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவர் சுமதி, சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வராஜ் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் சாத்தான்குளம் பகுதியில் தடுப்பூசி போடும் பொதுமக்களுக்கு ஸ்மார்ட் போன், இண்டக்‌ஷன் ஸ்டவ், வாட்ச் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கோவில்பட்டி
கோவில்பட்டி

கடந்த வாரம் குலுக்கல் முறையில் 3 பேரைத் தேர்வு செய்து பரிசிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி போடும் மக்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தங்கக்காசு, ஹெட்போன், சேலை, ஹாட் பாக்ஸ் போன்ற பரிசுகள் வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழகம் முழுவதும் நாளை (12-ம் தேதி) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோவில்பட்டி நகர் பகுதிகளில் 33 மையங்களிலும், கோவில்பட்டி சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் 69 மையங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தடுப்பூசி
தடுப்பூசி
`வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தோம்!' - 100% தடுப்பூசி செலுத்தி சாதித்த கொடைக்கானல்

இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களில் 100 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முதல் மூன்று அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்கக்காசுகளும், அடுத்த மூன்று பேருக்கு வயர்லெஸ் ஹெட் செட்களும், 50 பேருக்கு சேலைகளும், 30 பேருக்கு ஹாட் பாக்ஸும், 20 பேருக்கு டி-ஷர்ட்டுகளும் வழங்கப்பட உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு