Published:Updated:

வருகிறது கிருஷ்ணா தண்ணீர்! - சென்னையில் குழாய் நீர் சப்ளை அதிகரிக்க வாய்ப்பு

கிருஷ்ணா நதி நீர் சென்னையை வந்தடைந்த பிறகு, சென்னையில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கால்வாய்
கால்வாய்

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கடந்த மாதம் ஆந்திராவுக்குச் சென்று கிருஷ்ணா நதிநீர் குறித்து, அந்த மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஜெகன்மோகன் ரெட்டியுடன் வேலுமணி, ஜெயக்குமார்
ஜெகன்மோகன் ரெட்டியுடன் வேலுமணி, ஜெயக்குமார்

அப்போது, சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைக்காக 8 டி.எம்.சி தண்ணீர் தருவதாக ஆந்திர முதல்வர் உறுதியளித்தார்.

தற்போது, ஆந்திராவில் உள்ள கண்டலேறு நீர்த்தேக்கத்தில் 7 டி.எம்.சி தண்ணீர் இருப்பதால், 10 டி.எம்.சி அளவுக்கு அதிகரித்த பிறகு சென்னைக்குத் தண்ணீரைத் திறந்துவிட ஆந்திர அரசு முடிவுசெய்துள்ளது.

chennai metro water
chennai metro water

கண்டலேறு அணையைத் திறந்துவிட்டால், அங்கிருந்து 152 கி.மீ தூரத்தில் ஊத்துக்கோட்டையில் உள்ள ஜீரோ பாயின்ட்டை வந்தடைய பத்து நாள்களுக்கு மேல் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

கடந்த சில நாள்களாகப் பெய்த மழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆகையால், மூன்று மாதங்களுக்கு முன்பு தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவிய அளவுக்கு இப்போது பிரச்னை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Vikatan

மேலும், கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீர், இந்த மாத இறுதியிலோ, அடுத்த மாதத்தின் முதல் வாரத்திலோ சென்னையை வந்தடையும் என்றும், அதன் பிறகு குடிநீர் விநியோகம் அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.