Published:Updated:

`என்னை உன் அண்ணனா நினைச்சுக்க!' - கலங்கி நின்ற மாற்றுத்திறனாளிக்கு உதவிய ஆய்வாளர்

வெங்கடேஷூக்கு உதவும் கார்த்திகேயன்
வெங்கடேஷூக்கு உதவும் கார்த்திகேயன் ( நா.ராஜமுருகன் )

மனம் போன போக்கில் குளித்தலை சுங்ககேட் அருகில், கால்கள் தள்ளாடியபடி ஒருவர் சென்றிருக்கிறார். அப்போது, குளித்தலை போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளர் கார்த்திகேயன், வெங்கடேஷை மறித்து விசாரித்திருக்கிறார். கண்ணீர் விட்ட வெங்கடேஷ், தனது நிலையை கார்த்திகேயனிடம் விவரித்திருக்கிறார்.

ஊரடங்கால் வேலை கிடைக்காமல் சாப்பாட்டுக்கே தவித்து நடுரோட்டில் கலங்கி நின்ற மாற்றுத்திறனாளி இளைஞருக்கு உடனடியாக உதவி, அவரை நெகிழ வைத்திருக்கிறார், போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் ஒருவர்.

வெங்கடேஷூக்கு உதவும் கார்த்திகேயன்
வெங்கடேஷூக்கு உதவும் கார்த்திகேயன்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் கண்டியூர் கிராமத்தில் வசிப்பவர் ஆறுமுகம். இவர் மகன், வெங்கடேஷ். 21 வயது நிரம்பிய இளைஞரான இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவர் தாய் இறந்துவிட, இவர் தந்தையும் இவரை விட்டுவிட்டு, தனியே போய்விட்டார்.

`எனக்கு ராமு இன்னொரு பிள்ளை மாதிரி!’ - நாய்க்கு மாஸ்க் மாட்டி கரிசனம் காட்டும் மனிதர்

இதனால், இவரது பாட்டி வீட்டில் வாழ்ந்து வருகிறார் வெங்கடேஷ். விவசாயக் கூலிவேலை பார்த்து, காலத்தைக் கடத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் பிரச்னை அதிகமாகி, ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஒருமாத காலமாக வேலை இல்லாததால், வருமானத்துக்கு வழியில்லாமல் அல்லாடி வந்திருக்கிறார் வெங்கடேஷ்.

வெங்கடேஷ்
வெங்கடேஷ்
நா.ராஜமுருகன்

சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வெங்கடேஷூம் அவர் பாட்டியும் பரிதவித்து வந்திருக்கிறார்கள். இதனால், பல நாள்கள் பட்டினியாகக் கழித்த வெங்கடேஷ் பசி தாங்காமல் யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிறார். மனம் போன போக்கில் குளித்தலை சுங்ககேட் அருகில், கால்கள் தள்ளாடியபடி சென்றிருக்கிறார். அப்போது அங்கு பணியில் இருந்த குளித்தலை போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளர் கார்த்திகேயன், வெங்கடேஷை மறித்து விசாரித்திருக்கிறார். பொலபொலன்று கண்ணீர் விட்ட வெங்கடேஷ், தனது நிலையைக் கார்த்திகேயனிடம் விவரித்திருக்கிறார்.

``அஞ்சு நாளா நானும் என் பாட்டியும் சாப்பிடலண்ணே. பசி என்னை கொல்லுது. அதான், வெளியில் வந்தேன். ஒரு டீ வாங்கி தருவீங்களா?" என்று கண்ணீரோடு சொல்லியிருக்கிறார். அவருடைய நிலைமையைக் கேட்டு கண்கலங்கிய ஆய்வாளர் கார்த்திகேயன், உடனடியாக வெங்கடேஷூக்கும் அவருடைய பாட்டிக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். அதோடு, உடனடியாக குளித்தலையைச் சேர்ந்த இளைஞர்கள் மூலம், பத்து நாளுக்குத் தேவையான அரிசி, மளிகைச் சாமான்கள், காய்கறிகள் பெற்ற கார்த்திகேயன், அதை உடனடியாக வெங்கடேஷோடு அவருடைய வீட்டுக்குச் சென்று வழங்கி, வெங்கடேஷை நெகிழ வைத்தார்.

வெங்கடேஷ் வீட்டுக்குச் செல்லும் கார்த்திகேயன்
வெங்கடேஷ் வீட்டுக்குச் செல்லும் கார்த்திகேயன்
நா.ராஜமுருகன்

இதனால், நா தழுதழுத்த வெங்கடேஷ், ``இந்த உதவியை மறக்க மாட்டோம். இன்னும் இரண்டு நாள்கள் சாப்பிடலன்னா, நாங்க செத்துப் போயிருப்போம்" என்று உருக்கமாகச் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட கார்த்திகேயன், ``என்னை உன் அண்ணனா நெனச்சுக்க. என்ன உதவின்னாலும், எந்த நேரம் வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடு. உதவி செய்ய ஓடோடி வர்றேன். கொரோனா பிரச்னை முடியட்டும். நிரந்தரமா வருமானம் வர்ற மாதிரி, ஏதாச்சும் தொழில் தொடங்க உனக்கு ஏற்பாடு பண்றேன்" என்று சொல்ல, "இந்த உதவியை என் ஆயுசுக்கும் மறக்கமாட்டேன்ணே" என்று நெக்குருகிப்போய் சொன்னார் வெங்கடேஷ்.

இதுகுறித்து, ஆய்வாளர் கார்த்திகேயனிடம் பேசினோம். ``அந்த இளைஞரின் நிலைமையைக் கேட்டதும், கண் கலங்கிப் போச்சு. குளித்தலையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரின் உதவியோடு, வெங்கடேஷூக்குத் தேவையான அரிசி, மளிகைச் சாமான்களை வாங்கி கொடுத்தோம்.

வெங்கடேஷூக்கு உதவும் கார்த்திகேயன்
வெங்கடேஷூக்கு உதவும் கார்த்திகேயன்
நா.ராஜமுருகன்

அவருக்கு சொந்தமா தொழில் தொடங்க ஏற்பாடு செய்ய இருக்கிறோம். அந்த இளைஞருக்கு உதவ முடிந்தது என்பதில் எனக்கு சிறு மனநிறைவு ஏற்பட்டிருக்கிறது" என்றார் நெகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு