Published:Updated:

`வறுமையைப் போக்க கறவை மாடு; மகனுக்கு கல்வி உதவி!' - ஊரடங்கில் உறுதிகொடுத்த கும்பகோணம் எம்.எல்.ஏ

உதவி செய்த தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன்
உதவி செய்த தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன்

குடும்பத்துக்குத் தேவையான அரிசி, கோதுமை மாவு, மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிச்சென்று அவர்களிடம் கொடுத்தார்.

கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, விபத்து ஒன்றில் காலில் அடிபட்டதால் நடக்க முடியாமல் போனதுடன் போதிய வருமானமும் இல்லாமல்போனது. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கின் துயரம் வேறு அவரின் குடும்பத்தைச் சூழ்ந்துகொள்ள, தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்த `ஒன்றிணைவோம் வா' என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளார். இதையடுத்து, அப்பகுதி எம்.எல்.ஏ உடனடியாகக் களமிறங்கி உதவியது, அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்பழகன்
அன்பழகன்

கும்பகோணம் அருகே உள்ள பாபுராஜபுரம் ஊராட்சி, புளியஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர், சக்திவேல். இவர், விபத்து ஒன்றில் கால்கள் செயலிழந்து நடக்க முடியாமல், கடந்த 15 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே படுத்த படுக்கையாகக் கிடக்கிறார்.

இவரின் மனைவி, கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு இவர்களை மேலும் இன்னல்களுக்கு ஆளாக்கியது.

உதவி
உதவி

இந்த நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்த, 'ஒன்றினைவோம் வா' என்ற எண்ணுக்கு அழைத்து, தன் நிலையைக்கூறி உதவிகள் கேட்டிருக்கிறார் சக்திவேல். இதையடுத்து, இந்த விவரங்கள் அனைத்தும் கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகனுக்குத் தெரிவிக்கப்பட்டது. சக்திவேல் குடும்பத்தின் துயர நிலையைக் கேட்டு மனம் கலங்கிய அன்பழகன், உடனடியாக அவர் குடும்பத்துக்குத் தேவையான அரிசி, கோதுமை மாவு, மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிச்சென்று அவர்களிடம் கொடுத்துள்ளார்.

`5 வார கடும் ஊரடங்கு... கிடைத்தது பலன்!’ - கொரோனா போரில் நியூசிலாந்துக்கு கிடைத்த வெற்றி

மேலும், சக்திவேல் மனைவி கையில் ரூ.2,000 நிதி உதவியும் வழங்கினார். தொடர்ந்து, `இந்தப் பொருள்கள் அனைத்தும் 20 நாள்கள் பயன்பாட்டுக்கு வரும். வேறு என்ன தேவையோ என்னைக் கேளுங்கள் செய்துதருகிறேன்' எனக் கூறியிருக்கிறார் அன்பழகன். இதையடுத்து பேசிய சக்திவேலின் மனைவி, ` சார் எங்களுக்குக் கடன் கொஞ்சம் இருக்கிறது. அதைத் தீர்க்க வேண்டும். போதிய வருமானம் இல்லாமலும் சிரமப்படுகிறோம். கறவை பசுமாடு ஒன்று வாங்கி கொடுத்தால் அதில்வரும் வருமானத்தை வைத்து சிக்கல்களை தீர்த்துக்கொள்வதுடன் நாங்களும் பிழைத்துக்கொள்வோம்' எனத் தயங்கியபடி கூறியிருக்கிறார்.

இதைக் கேட்ட அன்பழகன், ''கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக நீங்கிய பிறகு கறவை மாடு வாங்கித் தருகிறேன்'' என வாக்குறுதி கொடுத்துள்ளார்.

அன்பழகன்
அன்பழகன்

அத்துடன், சக்திவேலின் மகன் விஜய் கல்வி பயில்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் அன்பழகன் கூறியுள்ளார்.

இதன்பிறகு பேசிய சக்திவேல், `15 வருடங்களா கடும் போராட்டத்துடன் வாழ்கை ஓடிக்கொண்டிருந்தது. கறவை மாடு மற்றும் எங்க மகன் கல்விச் செலவை ஏற்பதாகக் கூறியுள்ளது எங்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு' எனக் கலங்கியபடியே கூற, `இப்ப மட்டும் இல்ல, எப்பவும் உங்களுக்குத் துணையாக இருப்போம் ' எனக் கூறி உற்சாகப்படுத்தினார் சாக்கோட்டை அன்பழகன்.

அடுத்த கட்டுரைக்கு