Published:Updated:

`நுங்குக்கு ஆசைப்பட்ட குழந்தைகள்; பனை மரத்தில் ஏறிய தந்தை!’- திருநின்றவூரில் நடந்த சோகம்

நுங்கு
நுங்கு

நுங்கு வேண்டும் என குழந்தைகள் ஆசைப்பட்டுக் கேட்டதும் பனை மரத்தில் ஏறிய தந்தை, உயரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர், நடுகுத்தகை, கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரின் மனைவி மகாலட்சுமி (28). இந்தத் தம்பதிக்கு திவ்யா என்ற மகளும் தினேஷ் என்ற மகனும் உள்ளனர். தியாகராஜன், கூலி வேலை செய்துவந்தார்.

திருநின்வூர் காவல் நிலையம்
திருநின்வூர் காவல் நிலையம்
ஊரடங்கில் ஏன் இப்படி வெளியில் விளையாடுகிறீர்கள்? - தட்டிக் கேட்ட தம்பிக்காக உயிரை விட்ட அண்ணன்

மகாலட்சுமி, பூந்தமல்லியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஊரடங்கு காரணமாக தியாகராஜன் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இந்தச் சமயத்தில் கடந்த 18.5.2020-ம் தேதி தினேஷும் திவ்யாவும் `அப்பா எங்களுக்கு பனை நுங்கு வேண்டும்' என்று கேட்டுள்ளனர். உடனே தியாகராஜன், வீட்டின் அருகில் இருக்கும் பனை மரத்தில் ஏறினார்.

அப்போது மரத்தின் உச்சியில் தியாகராஜன் ஏறியபோது, திடீரென கால் தவறி அவர் கீழே விழுந்தார். அதைப்பார்த்ததும் குழந்தைகள் கதறி அழுதனர். இந்தச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தியாகராஜனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்

வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த தியாகராஜனிடம் அவரின் குழந்தைகள் நுங்கு வேண்டும் என ஆசையாகக் கேட்டுள்ளனர். விலைகொடுத்து வாங்கிக் கொடுக்காமல் வீட்டின் அருகில் உள்ள பனைமரத்தில் நுங்கு இருப்பதைக் கண்ட தியாகராஜன், மரத்தில் ஏறி அதைப்பறிக்க திட்டமிட்டார்.
நடுகுத்தகை பொதுமக்கள்
திருவள்ளூர் அரசு மருத்துவமனை
திருவள்ளூர் அரசு மருத்துவமனை

மரத்திலிருந்து கீழே விழுந்த தியாகராஜனுக்கு தலையில் அடிபட்டு காது, மூக்கு ஆகிய பகுதிகளிலிருந்து ரத்தம் கொட்டியது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தியாகராஜன் உயிரிழந்தார். இதுகுறித்து மகாலட்சுமி, திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகிறார்.

இதுகுறித்து நடுகுத்தகை பகுதி மக்கள் கூறுகையில், ``வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த தியாகராஜனிடம் அவரின் குழந்தைகள் நுங்கு வேண்டும் என ஆசையாகக் கேட்டுள்ளனர். விலைகொடுத்து வாங்கிக் கொடுக்காமல் வீட்டின் அருகில் உள்ள பனைமரத்தில் நுங்கு இருப்பதைக் கண்ட தியாகராஜன், மரத்தில் ஏறி அதைப்பறிக்க திட்டமிட்டார். அதனால், குழந்தைகளிடம், `பனை மரத்தில் ஏறி நுங்கு பறித்து வெட்டித் தருகிறேன்' என்று கூறியுள்ளார்.

துடிப்பை நிறுத்திய மருத்துவக் கல்லூரி மாணவியின் இதயம்! - viscera ரிப்போர்ட்டால் விலகிய மர்மம்
எப்.ஐ.ஆர்
எப்.ஐ.ஆர்

அப்போது தியாகராஜன் பனை மரத்தில் ஏறுவதை கீழே நின்றபடி குழந்தைகள் பார்த்துள்ளனர். குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற பனைமரத்தில் ஏறிய தியாகராஜனுக்கு இப்படியொரு நிலைமை ஏற்படும் என நாங்கள் நினைக்கவில்லை" என்றனர்.

குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற பனை மரம் ஏறி நுங்கு வெட்ட சென்ற தியாகராஜனின் இறுதிச் சடங்கு நடந்தது. அப்போது அவரின் மனைவி மகாலட்சுமி, குழந்தைகள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அடுத்த கட்டுரைக்கு