Published:Updated:

இடைவிடாத மழை; அடுத்தடுத்து விழும் மரங்கள் - நிலச்சரிவு அபாயத்தில் நீலகிரி!

விழுந்த மரங்கள்
News
விழுந்த மரங்கள்

இடைவிடாது தொடர்ந்து பெய்துவரும் மழையால், நீலகிரியில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகத் தொடர்மழை பெய்துவருகிறது. குறிப்பாக ஊட்டி, குந்தா, கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. மழையின் காரணமாக ஊட்டி, லவ்டேல், கோத்தகிரி என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத மரங்கள் சாலைகளின் குறுக்கே மின்கம்பங்களின் மீதும் விழுந்திருக்கின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, பல்வேறு மலைக் கிராமங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்தடுத்து விழும் மரங்கள்
அடுத்தடுத்து விழும் மரங்கள்

குன்னூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காணப்படுவதால் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்பட்டிருக்கிறது. மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட தொடங்கியிருக்கிறது. இதனால், அணைகளின் நீர்மட்டமும் மெள்ள உயரத் தொடங்கியிருக்கிறது. பெரும்பாலான அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மாயாற்றில் குளிக்கச் சென்ற கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இடைவிடாது தொடர்ந்து பெய்துவரும் மழையால் நீலகிரியில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். அதேசமயம் பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கையாகத் தடுப்பு நடவடிக்கைகளிலும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், மீட்பு முகாம்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்தடுத்து விழும் மரங்கள்
அடுத்தடுத்து விழும் மரங்கள்

மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``ரெண்டு நாளாகவே மழை அதிகமா இருக்கு. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருக்கிறோம். சில இடங்களில் மரங்கள் விழுகின்றன, உடனடியாக அகற்றிவருகிறோம். போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டுவருகிறது. அபாயமான நிலையில் இருக்கக்கூடிய கட்டடங்கள், மரங்கள் அடியில் நிற்கவோ வாகனங்களை நிறுத்தவோ கூடாது என எச்சரித்துவருகிறோம். பேரிடர் அபாயம் இருக்கும் 200-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுவருகிறோம். மீட்புக்குழுவினரும் தயார்நிலையில் இருக்கிறார்கள். எனவே, மக்கள் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.