Published:Updated:

`புதுவையைப்போல் உதவி வழங்கணும்! - தமிழக அரசுக்கு வழக்கறிஞர் அமைப்பு வேண்டுகோள்

தமிழக அரசு
தமிழக அரசு

கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் கடந்த 32 நாள்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.

``கொரோனா ஊரடங்கு பாதிப்பால் வாடும் மக்களுக்கு புதுவை மாநிலம் வழங்கும் நிவாரண உதவிபோல் தமிழக அரசும் வழங்க வேண்டும்" என்று வழக்கறிஞர் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கொரோனா
கொரோனா

இதுபற்றி மயிலாடுதுறை மாவட்டத்துக்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராமசேயோனிடம் பேசினோம்.

``கடந்த டிசம்பர் 2019-ல் சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட்-19 என்று சொல்லக்கூடிய கொரானா வைரஸ் தொற்று, மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியது.

கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் கடந்த 32 நாள்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஏழை மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் முற்றிலும் இழந்து தவியாய் தவித்து வருகிறார்கள். ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் பல லட்சக்கணக்கான மக்கள், பசி பட்டினியால் வாடி வருகிறார்கள். இந்த அவல நிலையை போக்குவது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.

அண்மையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அம்மாநில மக்களின் துயர்த் துடைக்க புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.2,000 உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.

 சேயோன்
சேயோன்

தமிழகத்திலும் அதுபோன்று மக்களுடைய வறுமையையும் துயரையும் பசியையும் நீக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு