Published:Updated:

நீலகிரி: நீதிபதியைக் கண்டித்து நீதிமன்றப் புறக்கணிப்பில் இறங்கிய வழக்கறிஞர்கள்! - என்ன காரணம்?

நீலகிரி

ஊட்டியில் நீதிபதியைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

நீலகிரி: நீதிபதியைக் கண்டித்து நீதிமன்றப் புறக்கணிப்பில் இறங்கிய வழக்கறிஞர்கள்! - என்ன காரணம்?

ஊட்டியில் நீதிபதியைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

Published:Updated:
நீலகிரி

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இயங்கிவரும் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக முருகன் என்பவர் இருந்துவருகிறார். இவர் நீதிபதியாக நீலகிரியில் பொறுப்பேற்று சில மாதங்களே ஆன நிலையில், இவர் நீதிமன்றத்துக்குள் தங்களை ஒருமையில் பேசி அவமானப்படுத்திவருவதாகக் குற்றம்சாட்டி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நீதிமன்றப் புறக்கணிப்பு தொடர்பாக நீலகிரி மாவட்டத்தின் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சந்திரபோஸ், ``நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் மாவட்ட நீதிபதி திரு.P.முருகன் அவர்கள், நீதிமன்றப் பணிகளுக்கு வழக்கறிஞர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தும், வழக்கறிஞர் சங்கங்களை மதிக்காமலும், வழக்கறிஞர்களை மதிக்காமலும், நீதிமன்றத்துக்கு வரும் வழக்காடிகள், காவல்துறையினர், வழக்கறிஞர்களை நீதிமன்றத்தில் ஒருமையில் பேசி அவமானப்படுத்திவருகிறார்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

மேலும், நீதிமன்ற நேரம் கடந்த பிறகும், இரவு 8:00 மணி வரை பணியாளர்களையும், வழக்காடிகளையும், வழக்கறிஞர்களையும் நீதிமன்றத்தில் இருக்கவைக்கிறார். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் இரவு 8:00 மணிக்குப் பிறகு நீதிமன்றப் பணியாளர்கள், வழக்காடிகள், வழக்கறிஞர்கள் அவர்களது வீட்டுக்குச் செல்வது கடினமாக இருக்கிறது. இதைப் பலமுறை மாவட்ட நீதிபதியிடம் எடுத்துக்கூறியும் அவர் செவிசாய்க்காததால், அவரின் செயலைக் கண்டித்து 25, 26 இரு தினங்கள் மாவட்டம் முழுவதும் நீதிமன்றங்களைப் புறக்கணித்து எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கப்போகிறோம்" என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் நேற்றைய தினம் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதேபோல இன்றும் ஈடுபட்டு வருகின்றனர்.

`சிங்கம்’ திரைப்பட சூர்யா பாணியில் மீசைவைத்திருந்த காவலரின் மீசையைக் கத்தரிக்கச் சொன்ன நீதிபதி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!