Published:Updated:

`தமிழக வழக்கறிஞர்களுக்கு செய்கிற அநீதி!’- கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கான தேர்வால் எழுந்த சர்ச்சை

மொத்தமே 176 நீதிபதிக்களை தான் தேர்ந்தெடுக்க உள்ளனர்.தமிழ்நாட்டில் வக்கறிஞராக பதிவு செய்து விட்டு,தொழிலில் உள்ள வழக்கறிஞர்களே 60,000 பேருக்கு மேற்பட்டவர்கள் உள்ள நிலையில் வெளிமாநிலத்தவரை நீதிபதிகளாக நியமிப்பதற்கான வேலையை இந்த அரசு செய்கிறது.

வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்
வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

கீழமை நீதிமன்றங்களின் 176 நீதிபதி பணி இடங்களுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் சார்பில் நாளை தேர்வு நடக்க இருக்கும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்
வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

தஞ்சாவூரில் நீதிமன்ற வாசலில் இந்த தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இதனை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்களது மனக்குமுறல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் தேசிய பேரியக்கம் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளித்துடன் அதன் தலைவர் பெ.மணியரசன் இதில் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

இது குறித்து கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் துணை தலைவர் நல்லதுரையிடம் பேசினோம், ``கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்திற்காக இது வரை நடைபெற்ற தேர்வுகளில் இது போன்ற வெளிப்படையான விதிவிலக்கை தேர்தல் ஆணையம் கூறியது கிடையாது. அத்துடன் இதுவரை நடந்த தேர்வுகளில் தமிழர் அல்லாதவர்களுக்கு, தமிழ் மொழி பேச தெரியாதவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கொடுத்ததும் இல்லை.

வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்
வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஆனால் இப்போது குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறையில் தமிழ், ஆங்கிலம் கட்டாயம் படிக்க தெரிஞ்சிருக்கணும் என கூறிவிட்டு பின்னர் குறிப்பு என கூறி தமிழ் மொழியில் போதிய அறிவு திறன் இல்லாதவர்களும் இந்த தேர்வை எழுதலாம் என கூறியிருக்கின்றனர். அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றால் பணி நியமனம் பெற்ற பணிக் காலத்திற்குள் மீண்டும் இரண்டாம் நிலை தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அப்படி தேர்ச்சி பெறவில்லை என்றால் அந்த நீதிபதி பணியை இழந்து விடுவார்கள் என விதிமுறையில் கூறியிருக்கின்றனர்.

மொத்தமே 176 நீதிபதிக்களை தான் தேர்ந்தெடுக்க உள்ளனர். தமிழ்நாட்டில் வக்கறிஞராக பதிவு செய்து விட்டு,தொழிலில் உள்ள வழக்கறிஞர்களே 60,000 பேருக்கு மேற்பட்டவர்கள் உள்ள நிலையில் வெளிமாநிலத்தவரை நீதிபதிகளாக நியமிப்பதற்கான வேலையை இந்த அரசு செய்கிறது. இதற்காக குறிப்பிட்ட வருடங்கள் வழக்கறிஞராக பதிவு செய்து விட்டு, பணி செய்திருக்க வேண்டும் என்ற எந்த விதிமுறையையும் இந்த தேர்வில் கடைபிடிக்கவில்லை. நேற்று பரிட்சை எழுதி விட்டு வழக்கறிஞராக தேர்ச்சி பெற்றவர்கள் கூட எந்த அனுபவமும் இல்லாமல் இந்த தேர்வை எழுதுவதற்கான நிலை உள்ளது.

வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்
வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாட்டில் தமிழ் நன்றாக பேச எழுத தெரிந்த வழக்கறிஞர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது ஏன் தமிழ் தெரியாதவர்களும் தேர்வு எழுதலாம் என்கிற அனுமதியை ஏன் கொடுக்கிறது தமிழக அரசு. தமிழ் நாட்டை பொறுத்தவரை நீதிமன்றத்திற்கு வழக்குக்காக வரும் வழக்காடிகள் தமிழர்கள், வழக்கை நடத்தும் வழக்கறிஞர்கள் தமிழர்களாக இருக்கிறார்கள். அனைத்து வழக்குகளின் டாக்குமெண்டுகளும் தமிழிலேயே இருக்கிறது.

ஆனால் இதை கேட்கிற நீதிபதிக்கு தமிழ் தெரியவில்லை என்றால் எப்படி வழக்கு தாக்கல் செய்த நபருக்கு நீதி கிடைக்கும். பிற மொழியாளர்களை நீதிபதி பதவிக்கு திணிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது. இது செயலுக்கு வந்தால் ஒட்டு மொத்த நீதிதுறையையும் சீரழித்து விடும். மனு தாரர்களுக்கு சரியான நியாமான நீதி கிடைக்காது. அத்துடன் இந்த தேர்வு முறை தமிழக வழக்கறிஞர்கள் நீதிபதியாகும் வாய்ப்பை தட்டி பறிக்கும். தமிழக நீதிமன்றங்களில் பிற மொழியாளர்களின் ஆதிக்கத்தை ஏற்படுத்தும் என இந்த முறையை வேண்டாம் என்கிறோம்.

வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்
வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருவதால் தமிழக அரசு இந்த முறையை கொண்டு வந்துள்ளது. இதற்கு முன் நீதிபதிகளுக்கான தேர்தல் எத்தனையோ முறை நடந்திருக்கிறது. ஆனால் இது போன்ற விதிமுறையை ஏற்படுத்தவும் இல்லை பின்பற்றவும் இல்லை.

தமிழகத்தில் போதுமான வழக்கறிஞர்கள் இல்லை அதனால் வெளி மாநில வழக்கறிஞகர்களை தேர்வு எழுத அனுமதிக்கிறோம் என்றால் ஏற்று கொள்ள கூடியது.. மாறாக இங்கேயே கூடுதலாக வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். இன்னும் படித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிலை என்னவாகும்? இது தமிழ்நாட்டு வழக்கறிஞர்களுக்கு செய்கிற மிகப் பெரிய அநீதியாகும். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களிடமும் மனு கொடுத்திருக்கிறோம்.

வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்
வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

அத்துடன் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களிலும் மனு கொடுத்திருக்கிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. தஞ்சாவூர் தேர்வு மையத்தில் மட்டும் 400 வழக்கறிஞர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழக முழுவதும் பல ஆயிரம் பேர் எழுதுகின்றனர். தேவைப்படும் எண்ணிக்கையே 176 அப்புறம் எதற்கு வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் எழுத வைக்க வேண்டும் இவை தமிழர்களுக்கு செய்கிற மிகப்பெரிய துரோகம் இதற்கு உடனே தடை விதிக்க வேண்டும்” என்றார்.