Published:Updated:

சிறுத்தை உயிரிழந்த வழக்கு: ``விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன்” - எம்.பி ரவீந்திரநாத்

எம்.பி ரவீந்திரநாத்

``எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளேன். சிறுத்தை இறப்பில் உள்ள சந்தேகத்தை வனத்துறை விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும்” - எம்.பி ரவீந்திரநாத்

சிறுத்தை உயிரிழந்த வழக்கு: ``விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன்” - எம்.பி ரவீந்திரநாத்

``எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளேன். சிறுத்தை இறப்பில் உள்ள சந்தேகத்தை வனத்துறை விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும்” - எம்.பி ரவீந்திரநாத்

Published:Updated:
எம்.பி ரவீந்திரநாத்

தேனி எம்.பி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் பெரியகுளம் அருகே உள்ளது. இந்தத் தோட்டத்தில் கடந்த செப்டம்பர் 28 -ம் தேதி 2 வயது ஆண் சிறுத்தை உயிரிழந்தது. இதில் அந்தத் தோட்டத்தில் கிடை அமைத்திருந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி அலெக்ஸ் பாண்டியன், ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் என 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

உயிரிழந்த சிறுத்தை
உயிரிழந்த சிறுத்தை

தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் மற்றும் பாதுகாப்பு நலச்சங்கத்தினர், ``எம்.பியை தப்பிக்க வைக்கும் நோக்குடன் ஆடு மேய்க்கும் தொழிலாளி மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். எனவே அவரை விடுவித்துவிட்டு தோட்டத்தின் உரிமையாளராக எம்.பி ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினர். 

இதனைத்தொடர்ந்து சிறுத்தை உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு தேனி வனத்துறையினர் தோட்ட உரிமையாளர்களான ரவீந்திரநாத் எம்.பி. உள்பட மூன்று பேருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அதனடிப்படையில் தியாகராஜன், காளீஸ்வரன் ஆகிய இருவர் தங்கள் இடத்தை ரவீந்திரநாத் எம்.பி.க்கு கடந்த சில ஆண்டுகளுக்கு விற்பனை செய்து விட்டதாக வனத்துறையினரிடம் விளக்கம் அளித்திருந்தனர். மேலும் 3 பேரும் ஜாமீன் கோரி வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. 

எம்பி ஆதரவாளர்கள்
எம்பி ஆதரவாளர்கள்

ரவீந்திரநாத் எம்.பி விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில், அவர் சார்பில் அவரது வழக்கறிஞர்கள்  நேரில் வந்து தேனி வனத்துறையினரிடம் விளக்கக் கடிதம் அளித்தனர். இதனால் எம்.பிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை தேனி வன சரகர் அலுவலகத்தில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி உள்ளிட்ட வனத்துறையினர் முன் ரவீந்திரநாத் ஆஜரானார். இரண்டே முக்கால் மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு எம்.பியின் விளக்கம் வீடியோ பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரவீந்திரநாத், ``வனத்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். தேவைப்படும் பட்சத்தில் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளேன். சிறுத்தை இறப்பில் உள்ள சந்தேகத்தை வனத்துறை விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும்.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

இவ்விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை. வனவிலங்குகள் உயிரிழந்தால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரை அழைத்து விசாரிப்பது வழக்கம் தான். அதனடிப்படையில் தான் என்னை அழைத்து விசாரி்த்துள்ளனர். உரிய விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.