Published:Updated:

கரூர்: அமைச்சர்கள் நிகழ்ச்சி; ஸ்ட்ரக்கான லிஃப்ட்டில் சிக்கிக்கொண்ட மக்கள்! - மீட்கப்பட்டது எப்படி?

ஸ்ட்ரக்கான லிஃப்ட்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்கள், பத்திரிகையாளர் ஒருவர் என 10 பேர் பயணித்த லிஃப்ட் ஸ்ட்ரக்காகி நிற்க, அதன்பிறகு அதை உடைத்து அனைவரும் மீட்கப்பட்டனர்.

கரூர்: அமைச்சர்கள் நிகழ்ச்சி; ஸ்ட்ரக்கான லிஃப்ட்டில் சிக்கிக்கொண்ட மக்கள்! - மீட்கப்பட்டது எப்படி?

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்கள், பத்திரிகையாளர் ஒருவர் என 10 பேர் பயணித்த லிஃப்ட் ஸ்ட்ரக்காகி நிற்க, அதன்பிறகு அதை உடைத்து அனைவரும் மீட்கப்பட்டனர்.

Published:Updated:
ஸ்ட்ரக்கான லிஃப்ட்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் மற்றும் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக்கு பின்னர் தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு நிறைவுற்ற சில நிமிடத்தில், அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் அறைக்குச் சென்றனர். அப்போது, அங்கு செய்தி சேகரிக்க வந்த ஒரு பிரபல தினசரி நிருபர் மற்றும் பொதுமக்கள் என பத்து பேர், அங்கிருந்த மின் தூக்கி (Lift) மூலம் இரண்டாவது தளத்திலிருந்து முதல் தளத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.

மீட்பு பணி
மீட்பு பணி

அப்போது, திடீரென கீழ்த்தளத்தில் மின்தூக்கி நின்றது. மின் தூக்கியின் அவசர சாவி இருந்தும் திறக்க முடியாமல்போக, உள்ளே இருந்த பத்துபேரும் லிஃப்டுக்குள் மாட்டிக்கொண்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு பற்றிக்கொண்டது. இதனிடையே மின்தூக்கிக்குள் சிக்கிய 10 பேரில் ஒரு பெண் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால், அங்கிருந்த நிருபர் ஒருவர், இரும்புக் கம்பியை எடுத்து லிஃப்ட்டை உடைத்து, உள்ளே காற்றுபுகும் அளவுக்கு இடைவெளியை ஏற்படுத்தினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால், உள்ளே இருந்தவர்களுக்கு பயமும், பதற்றமும் சற்று தணிந்தது. இதற்கிடையில், கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக ஸ்பாட்டுக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, 10 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், மயக்கமான நிலையில் இருந்த மூதாட்டி ஒருவர், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மீட்கப்பட்ட மூதாட்டி
மீட்கப்பட்ட மூதாட்டி

துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத்துறை வீரர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பாராட்டு தெரிவித்தார். ஆனால், இந்தச் சம்பவம் நடந்தும், அங்கிருந்த அமைச்சர்களோ, எம்.எல்.ஏ-க்களோ ஸ்பாட்டுக்கு வரவில்லை. கடந்த மாதமே இதேபோல் இந்த லிஃப்ட் மக்கர் செய்ததாகவும், அதன்பிறகும் அதை சரிசெய்யாமல் வைத்ததுதான் இந்தச் சம்பவத்துக்கு காரணமாக அமைந்துவிட்டதாகவும் அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் சிலர் குறைப்பட்டுக்கொண்டனர்.