Published:Updated:

சிறையிலிருந்தே சாராய வியாபாரி உள்ளாட்சித் தேர்தலில் வென்றது எப்படி?! -திருப்பத்தூரில் நடந்தது என்ன?

கிருஷ்ணன்
News
கிருஷ்ணன்

``பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரியின் அக்காள் மகன்தான் கிருஷ்ணன். சித்தியுடன் சேர்ந்து கஞ்சா கடத்தல், சாராயம் காய்ச்சி விற்பது என கிருஷ்ணனும் தொடர்ந்து சட்ட விரோதச் செயல்களில்தான் ஈடுபட்டுவருகிறார்’’ என்கிறது வாணியம்பாடி போலீஸ்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஒன்றியத்திலிருக்கும் வளையாம்பட்டு ஊராட்சி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் கிருஷ்ணன். வயது 37. பிரபல சாராய வியாபாரியாகக் கூறப்படும் கிருஷ்ணன்மீது கஞ்சா, சாராய விற்பனை தொடர்பாக சில வழக்குகள் இருப்பதாகவும் விவரிக்கிறது வாணியம்பாடி போலீஸ். இந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வளையாம்பட்டு ஊராட்சியிலிருக்கும் ஒன்பதாவது கிராம வார்டு பதவிக்கு சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட கிருஷ்ணன் வாக்குப் பதிவுக்கு முன்பு, அதாவது கடந்த 3-ம் தேதியே கைதுசெய்யப்பட்டார். லாலா ஏரிப் பகுதியில் லாரி டியூப் மற்றும் கேன்களில் பிடிபட்ட 150 லிட்டர் சாராயத்தை கிருஷ்ணன்தான் பதுக்கிவைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது வாணியம்பாடி தாலுகா போலீஸ். இந்த நிலையில், கிராம பஞ்சாயத்து வார்டு தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நான்கு பேரையும் பின்னுக்குத் தள்ளி சிறையிலிருந்தபடியே கிருஷ்ணன் வெற்றிபெற்றிருக்கிறார்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிருஷ்ணனின் மனைவி
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிருஷ்ணனின் மனைவி

பதிவான வாக்குகள் 373. அவற்றில் கிருஷ்ணன் பெற்றவை 194. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நாளை பதவி ஏற்கிறார்கள். கிருஷ்ணன் சிறையிலேயே இருப்பதால் அவரால் கிராம வார்டு உறுப்பினராக பதவி ஏற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. வரும் 22-ம் தேதி ஊராட்சி மன்றத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக வாக்குப்பதிவும் நடைபெறவிருக்கிறது. வளையாம்பட்டு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவியையும் கிருஷ்ணன் குறிவைத்திருக்கிறார். இதனால், கிருஷ்ணனின் மனைவி ராஜேஸ்வரி தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹாவைச் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், ‘‘என் கணவர் மனம் திருந்தி வாழ்ந்துவந்த நிலையில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். காவல்துறையினர் அவர்மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தேர்தலில் வெற்றிபபெற்ற அவர் வார்டு உறுப்பினராகப் பதவி ஏற்க அனுமதித்து தக்க வழி செய்ய வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார். கிருஷ்ணனின் மனைவியின் புகார் குறித்து வாணியம்பாடி போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘``வாணியம்பாடி நேதாஜி நகரைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர்மீது சாராயம் விற்பது தொடர்பாக 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரிடம் வேலை செய்கிறார்கள். பலமுறை கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்ற மகேஸ்வரி மீது 10 முறைக்கும்மேல் குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கிறது. எனினும், நீதிமன்றத்தில் முறையிட்டு குண்டர் தடுப்புக் காவலிலிருந்து நான்கைந்து மாதங்களிலேயே ஜாமீனில் வந்துவிடுகிறார்.

மகேஸ்வரி
மகேஸ்வரி

வெளியில் வந்த பிறகும் மகேஸ்வரி போதைப்பொருள்களை விற்றுவந்தார். அதன் மூலம் பெருமளவு பணம் சம்பாதித்து அசையா சொத்துகளையும் வாங்கிக் குவித்துள்ளார். மகேஸ்வரியின் அக்கா ராணியின் மகன்தான் இந்த கிருஷ்ணன். சித்தியுடன் சேர்ந்து கஞ்சா கடத்தல், சாராயம் காய்ச்சி விற்பது என கிருஷ்ணனும் தொடர்ந்து சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டுவருகிறார். 2020, மே மாதம் மகேஸ்வரி குடும்பத்தினர் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவரின் வீட்டிலிருந்து 1 கிலோ எடையிலான கஞ்சா பொட்டலங்களையும், 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் போலீஸார் கைப்பற்றினர். அப்போது, மகேஸ்வரியின் குடும்பத்தினர் காவல்துறையினரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர். தாக்குதலில் பெண் காவலர் ஒருவரின் கையில் காயம் ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, சார் பதிவாளர் அலுவலகம் மூலம் மகேஸ்வரியின் சொத்துகள் கணக்கிடும் பணியும் நடைபெற்றது. 40 சொத்துகளுக்கான ஆவணங்கள் கண்டறியப்பட்டு அனைத்தையும் அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்போதிருந்த மாவட்ட எஸ்.பி விஜயகுமார் மகேஸ்வரியின் ஆட்டத்தை அடக்கிவைத்திருந்தார். எஸ்.பி மாறிய பின் மகேஸ்வரி மீதான நடவடிக்கைகளும் குறைந்துவிட்டன. மீண்டும் மகேஸ்வரி சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டுவருவதையும் கண்காணித்துவருகிறோம். இவர்களின் சட்ட விரோதச் செயல் குறித்து புகார் அளிப்பவர்களை கை கால்களை உடைப்பது, ஊரைவிட்டு அடித்து விரட்டுவது என ரெளடித்தனம் செய்துவருகிறார்கள்.

நேதாஜி நகர், இந்திரா நகரில் மகேஸ்வரியின் ஆட்களே அதிகம் வசித்துவருகிறார்கள். அதனால்தான் கிருஷ்ணன் இந்திரா நகர் வார்டில் எளிதில் வெற்றிபெற முடிந்தது.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் வென்றிருந்தால் ஆச்சிர்யப்பட்டிருக்கலாம். இருநூறு, முந்நூறு வாக்குகளுடைய கிராம வார்டுகளில் அவர் வெற்றி பெற்றிருப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. மகேஸ்வரி தரப்பின் திட்டமே ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக கிருஷ்ணனைக் கொண்டுவருவதுதான். காவல்துறையினர் பொய்ப் புகார் பதிவு செய்துவிட்டதாக கிருஷ்ணன் மனைவி குற்றம் சாட்டுவதும் கட்டுக்கதை’’ என்கிறது காவல்துறை.

இது தொடர்பாக, கிருஷ்ணனின் வழக்கறிஞர் ராஜியிடம் விளக்கம் கேட்டோம். ‘‘கிருஷ்ணன் தற்போது திருந்தி வாழ்கிறார். சித்தி மகேஸ்வரியுடன் சேர்ந்து சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவதில்லை. திருந்தி வாழ்வதாக ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர், எஸ்.பி என அதிகாரிகளுக்கு கிருஷ்ணன் மனு அளித்துள்ளார். இந்த நிலையில்தான் ‘நீயெல்லாம் தேர்தலில் போட்டியிடலாமா?’ என்று சொல்லி பிரசாரத்தில் இருந்த கிருஷ்ணனை விசாரணைக்காக டி.எஸ்.பி-யின் ஸ்பெஷல் டீம் அழைத்துச் சென்று கைதுசெய்திருக்கிறது. நாங்கள் சென்று கேட்டதற்கு, பழைய வழக்கில் கைதுசெய்திருப்பதாகத் தெரிவித்தனர். காவல்துறையினர் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறோம்’’ என்றார்.