Published:Updated:

பெட்ரோல் டீசல் மாநில வரியைக் குறைக்க தற்போது சாத்தியமில்லை - நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் #NowatVikatan

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

live updates on 20-06-2021

20 Jun 2021 12 PM

பெட்ரோல் டீசல் வரிக் குறைப்பு சாத்தியமில்லை

"பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசு வரியைக் குறைக்க தற்போது சாத்தியமில்லை. ரூ32.90 வரியில் ரூ31.50-ஐ ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கிறது. இப்போது மாநில வரியை குறைத்தால் அது ஒன்றிய அரசுக்கு சாதகமாகிவிடும். எனவே தகுந்த நேரத்தில் மாநில வரி குறைக்கப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல். நாளை தொடங்க இருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், தமிழ்நாடு அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பெட்ரோல் டீசல் மாநில வரியைக் குறைக்க தற்போது சாத்தியமில்லை - நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் #NowatVikatan
20 Jun 2021 9 AM

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும்கீழ் குறைந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 58,419பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,81 நாள்களுக்குப் பிறகு புதிய பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

20 Jun 2021 8 AM

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் கைது

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன்  மீது நடிகை  புகார்
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை புகார்

துணை நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் போலீஸார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் மணிகண்டன் தலைமறைவாகினார். இந்நிலையில் இன்று பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு