Published:Updated:

கொரோனா தடுப்பு ஆலோசனை - அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைத்தார் ஸ்டாலின் #NowAtVikatan

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

Live updates/ 16-05-2021

16 May 2021 7 PM

சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைப்பு

கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை வழங்க அனைத்து கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

உறுப்பினர்கள் பட்டியல்

தி. மு.க - மருத்துவர் நா. எழிலன், அ.தி.மு.க - முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸ் - முனிரத்தினம், பா.ம.க - ஜி.கே.மணி, பா.ஜ.க - நயினார் நாகேந்திரன், ம.தி.மு.க - சதன் திருமலைக்குமர், வி.சி.க - எஸ் எஸ் பாலாஜி, சி.பி.எம் - நாகை மாலி, சி.பி.ஐ - ராமச்சந்திரன், ம.ம.க - ஜவாஹிருல்லா , கொ.ம.தே.க - ஈஸ்வரன், த.வா.க - வேல்முருகன், புரட்சி பாரதம் - ஜெகன் மூர்த்தி ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

16 May 2021 2 PM

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் நியமனம்.

ராஜேஷ் லக்கானி
ராஜேஷ் லக்கானி

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் லக்கானி 2016 - சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றியவர். தற்போது அவரை மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளது தமிழக அரசு.

16 May 2021 12 PM

தமிழகத்தில் நாளை முதல் இ-பதிவு கட்டாயம்!

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்படுகிறது. திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு இ-பதிவு அவசியம். வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கும் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு அறிவிப்பின் ஒரு பகுதியாக நாளை முதல் அமலுக்கு வருகிறது.

16 May 2021 11 AM

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை:

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு