Published:Updated:

Live Updates: காவிரியில் வெள்ளப்பெருக்கு... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர்
Live Update
மேட்டூர்

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருவதால் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. வெள்ளப்பெருக்கு, மழை தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!

05 Aug 2022 10 AM
05 Aug 2022 10 AM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவலாஞ்சியில் 200 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது!

நீலகிரி மழை
நீலகிரி மழை

வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரியில் கடந்த மூன்று நாள்களாக கனமழை பெய்துவருகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக அவலாஞ்சியில் 200 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.

05 Aug 2022 10 AM

முதல்வர் உத்தரவு!

ஸ்டாலின்
ஸ்டாலின்

வெள்ளப்பெருக்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது முன்னறிவிப்பின்றி இரவு நேரங்களில் அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.

05 Aug 2022 10 AM

கொள்ளிடம்: ஆர்ப்பரிக்கும் வெள்ளம்; மீட்புப்பணியில் 400 இளைஞர்கள்

``கொள்ளிடத்தில் திறந்துவிடப்படும் உபரிநீரால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. வெள்ளம் பாதித்தால் மக்களைக் காப்பற்ற 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தயார்நிலையில் இருக்கிறார்கள். அதேபோல் உணவுப்பொருள்கள், இருப்பிட வசதி என அனைத்தும் தயாராக உள்ளன” என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

05 Aug 2022 10 AM

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருவதால் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை
க. தனசேகரன்

இதன் காரணமாக கரையோரப் பகுதிகளிலுள்ள குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.